சேற்றில் குளிக்கும் பிரபல நடிகை... கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார்!
சேற்றில் குளிக்கும் பிரபல நடிகை... கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார்!

பிரபல நடிகையின் களிமண் குளியல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல மாடலான நர்கிஸ் பக்ரி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இம்தியாஸ் அலி இயக்கத்தில், ரன்பீர் கபூர் நடித்த 'ராக் ஸ்டார்' படம் மூலம் இந்தியில் அறிமுகமானார் நர்கிஸ். ஜான் ஆபிரஹாமின் மெட்ராஸ் கபே, டேவிட் தாவனின், மேய்ன் தேரா ஹீரோ, ஹவுஸ்புல் 3, அசார் உட்பட பல படங்களில் நடித்தார். ஸ்பை என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்த நர்கிஸ், தமிழில் பிரஷாந்த் நடித்த சாகசம் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.
கொரோனா லாக்டவுன் காரணமாக, தற்போது கலிபோர்னியாவில் இருக்கும் நடிகை நர்கிஸ் பக்ஃரி, அங்குள்ள ஸ்பா ஒன்றில் களிமண் குளியலில் ஈடுபட்டுள்ளார். உடல் முழுவதும் மண்ணைப் பூசி, வெயிலில் சில நிமிடங்கள் காய வைப்பதுதான் இந்தக் குளியல். அவர் களிமண் குளியல் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை லட்சக்கணக்கானோர் லைக்ஸ் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
newstm.in