சர்வாதிகாரி என்று கூறியது ஏன்?: ஸ்டாலின் விளக்கம்

கட்சியின் நலனுக்காகவே சர்வாதிகாரியாக மாறுவேன் என்று தெரிவித்தேன் என, திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
 | 

அந்த கடிதத்தில், ‘திராவிட இயக்க வரலாற்றில் அறவழிப் போராட்டங்களின் போது தலைமைக்கு சர்வாதிகாரிகள் நியமிக்கப்பட்டதுண்டு. ஹிந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் அண்ணாவை சர்வாதிகாரியாக நியமித்தார் பெரியார். அண்ணா ஆயுதம் ஏந்தவில்லை, அடக்குமுறை செய்யவில்லை; அன்பும், அறிவும் கொண்டு போராடினார். கட்சியின் நலனுக்காகவே சர்வாதிகாரியாக மாறுவேன் என்று தெரிவித்தேன். திமுக வெற்றி பெறக்கூடாது என்பதற்கே மிசா, முரசோலி நிலம் என தினமும் அவதூறு, பொய்கள் பரப்புகிறார்கள். அண்ணா வழியை தொடர்ந்த கருணாநிதி வழியில் பயணித்து திசை திருப்ப நினைப்போரைப் புறக்கணிப்போம். பொதுக்குழுவில் குறிப்பிட்ட வெற்றிக்கான தொடக்கப்புள்ளி கோடாக தொடர வேண்டும். கேடு மிகுந்த ஆட்சியாளர்களை விரட்டிடும் படையாக வேண்டும்’ அதில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP