‘அதிசயத்தை நம்பாமல் மக்களை நம்புகிறவர்கள் நாங்கள்’

அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர் ரஜினி; நாங்கள் நம்பிருப்பது வாக்காளர்கள், பொதுமக்கள் என்று, சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தபின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார்.
 | 

மேலும், ‘2021ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி ஏற்படும் என்பதையே அதிசயம் என ரஜினி கூறியிருக்கலாம். அதிமுக என்ற சிங்கத்தை ரஜினி, கமல் என யார் இணைந்து வந்தாலும் அசைக்க முடியாது. ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக மறைத்து விடும் என்றார்கள்; ஆனால் ஆட்சி தொடர்ந்து நடைபெறுகிறது’ என்றார்.

மேலும், புதிய தகவல் ஆணையர் அமைப்பது குறித்து நடைபெற்ற கூட்டத்தி எடுக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பாக ஆளுநருடன் சந்திப்பு நடைபெற்றதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP