பணம் கொடுப்பது போல் வீடியோ: முதல்வர் விளக்கம் !

முதல்வர் கே.பழனிசாமி, வாக்காளர் ஒருவருக்கு பணம் கொடுப்பது போன்ற வீடியோ ஒன்று சமூகவலை தளங்களில் பரவிவரும் நிலையில், அதற்கு தற்போது முதல்வர் விளக்கமளித்துள்ளார்.
 | 

பணம் கொடுப்பது போல் வீடியோ: முதல்வர் விளக்கம் !

முதல்வர் கே.பழனிசாமி, வாக்காளர் ஒருவருக்கு பணம் கொடுப்பது போல வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவரும் நிலையில், அதற்கு, முதல்வர் தற்போது விளக்கமளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது, பழக்கடை ஒன்றில் முதல்வர் கே.பழனிசாமிக்கு பெண்மணி ஒருவர் ஒரு சீப்பு வாழைப்பழத்தை கொடுக்கிறார். அதற்கான பணத்தை முதல்வர், தன் பின்னால் இருப்பவரிடமிருந்து வாங்கி கொடுக்கிறார். 

இந்த நிகழ்வை மையப்படுத்தி, முதல்வர் பழனிசாமி வாக்காளருக்கு பணம் கொடுப்பதாக எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வந்தது. முதல்வரே இப்படி செய்யலாமா? என அதில் கேள்வியும் எழுப்பட்டது.

இந்த நிலையில், அந்த வீடியோவிற்கு  முதல்வர் கே.பழனிசாமி தற்போது விளக்கமளித்துள்ளார். அதில், "பிரச்சாரத்தின்போது நான் பணம் கொடுத்ததாக கூறப்படுவது இட்டுக்கட்டப்பட்ட புரளி. பழ வியாபாரியிடம் பழம் வாங்கிவிட்டு அதற்கான பணத்தை கொடுத்தது தான் வீடியோவில் பதிவாகியுள்ளது. அதில், நான் வாழைப்பழம் வாங்கியதை எடிட் செய்துவிட்டு பணம் கொடுத்ததை மட்டும் பரப்புகிறார்கள்.

தேர்தல் நேரம் என்பதால் எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். எந்தப் பொருள் வாங்கினாலும் விலை கொடுத்து வாங்குவது எனது வழக்கம். திமுகவினரை போல் ஓசியில் வாங்கும் பழக்கம் எனக்கில்லை" என்று முதல்வர் தெரிவித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP