உஷார் ஆபீசர் உஷார்!

இனி வரும் காலத்தில் வாய் மொழி உத்தரவுக்கு தலையாட்டும் அதிகாரிகளும் சிக்குவார்கள். அதிகாரிகளே நீங்கள் நினைக்கும் ஆட்சி தற்போது நடக்க வில்லை என்பதை உணர்ந்து கொண்டு உஷாராக இருப்பது அனைவருக்கும் நல்லது. இதை நீங்கள் உணரவேண்டிய தருணத்தை சிதம்பரத்தின் டுவிட்டர் உருவாக்கி உள்ளது.
 | 

உஷார் ஆபீசர் உஷார்!

திமுக முதல் முறையாக ஆட்சிக்கு வந்த போது நடந்த சம்பவம் என செவி வழி செய்தி ஒன்று உண்டு. அப்போது அரசு அலுவலர்கள், தன்மானத்துடன் வாழ்ந்த காலம். அமைச்சர்கள் வேறு, அரசு வேறு என்ற நினைவில் அவர்கள் இருந்தார்கள். 

அப்போது, திமுக அரசின் முக்கிய பிரமுகர் ஒருவர், அதிகாரியிடம் ஒரு உத்தரவை வழங்க, சார் நாங்கள் அரசு அதிகாரிகள், நீங்கள் சொல்வது போல எப்படி செய்வது என்று கேள்வி எழுப்பினாராம். அதற்கு அந்த பிரமுகர், நீங்கள் கடந்த அரசின் அதிகாரியோ வரும் அரசின் அதிகாரியோ கிடையாது. இப்போதுள்ள அரசின் அதிகாரிகள் நீங்கள், இப்போது உள்ள அரசு நாங்கள், எனவே நான் சொல்வது படி செய்யுங்கள் என்றாராம்.

இப்போதுள்ள அதிகாரிகள் சீட்டு மாறுவதற்கு கூட விரும்புவதில்லை. பள்ளி தலைமை ஆசிரியர் கூட தனக்கு இவ்வளவு மாணவர்கள் உள்ள பள்ளி வேண்டும் என்று லஞ்சம் கொடுத்து இடம் பிடிப்பதாக கூட தகவல்கள் உலாவருகின்றன.

 இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்படுவதன் முதல் காரணமாக அதில் கிடைக்கும் லஞ்சம் என்று மாறிவிட்ட சூழ்நிலை. ஜெயலலிதா முதல்முறையாக ஆட்சிக்கு வந்ததும், உள்துறை செயலாளர் ஒருவர் சிறைக்கு சென்றார். கமிஷனர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அவர்கள் அதற்கு முந்தைய அரசின் போது செய்த செயல்கள் தான் காரணம் என்று கூட தகவல்கள் உலாவந்தன.

பெரும்பாலும், அரசின் இயகத்தின் அச்சாணியாக இருப்பது வாய்மொழி உத்தரவுதான். கீழே இருக்கும் அலுவலர் சார் எழுத்து மூலம் உத்தரவு இடுங்கள் என்றால், அவருக்கு ஏழைரை தொடங்கிவிட்டது என அர்த்தம். சனி உச்சத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். 

இதன் காரணமாகத்தான், எந்த துறையாக இருந்தாலும் செயலை செய்தவர் மட்டும் சிக்கி கொள்வார்கள். உயர் அதிகாரிகள் நியாயவான்களாக மாறிவிடுவார்கள். இது போல, எப்போதும் தப்பிக்க முடியாது என்பதை முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் தகவல் நிரூபித்துள்ளது.

இந்து முன்னணியில் பொதுச் செயலாளராக இருந்தவர் ஏகே முத்துவேல், அவர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டால் கைது செய்வார்கள் என்று எண்ணி, வீட்டில் இருக்காதீர்கள் என்னை போலீஸ் கைது செய்யும் போது, என்னை கைது செய்து விட்டால் மட்டும் போராட்டத்தை முடக்க முடியாது. 

இன்னன்னார் வெளியே இருக்கும் வரை போராட்டம் நடந்தே தீரும் என்று கூறி, போலீஸ் வேனில் ஏறி அமர்ந்து விட்டால், சம்பந்தப்பட்டவர்களை வீட்டில் சென்று போலீஸ் கைது செய்யும், அப்போது அனைவரும் ஒரே சிறையில் தான் இருப்போம். 

ஒழுங்காக போராட்டத்திற்கு வாருங்கள். இவ்வாறு இயகத்தின் சக நண்பர்களிடம் கூறுவார். அதைப் போலவே சிதம்பரம் டுவிட்டரில் ஐஎன்எஸ் மீடியா விவகாரத்தில் கோப்புகளை பரிசீலனை செய்து, 12 அதிகாரிகாரிகள் கையெழுத்து போட்ட பின்னர் தான் நான் கையேழுத்து போட்டேன், அவர்களை விட்டு விட்டு நீங்கள் மட்டும் ஏன் கைது செய்யப்பட்டீர்கள் என்று மக்கள் கேட்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் கேட்பது நியாயம் தான். இவரை நம்பி கையெழுத்து போட்ட அதிகாரிகள் திகார் களி தின்ன வேண்டாமா, பேச்சு துணைக்காவது ஆள் வேண்டும் அல்லவா? அதனால் தான் சிதம்பரம் இப்படி போட்டு வாங்குகிறார்.  அதிகாரிகள் ஊழல் செய்யாவிட்டால், இவரும் ஊழல் செய்ய வில்லை என்று தானே அர்த்தம் என்று யாரும் தவறாக நினைத்து விடக் கூடாது. 

இந்த விவகாரம் கீழ் இருந்து மேலாக செல்லவில்லை. மேலே இருந்து கீழே வந்தது. அதாவது சிதம்பரம், அவர் மகன் ஆகியோரை இந்திராணி முகர்ஜி அனைத்து விதத்திலும் கவனித்து விட்டதால் தான், இந்த கோப்பு நகர்ந்து இருக்கிறது.

அதன் பின்னர், 12 என்ற 120 ஆபீசர் கையெழுத்து போட்டாலும், அனைத்தும் வாய் மொழி உத்தரவு தான். கையெழுத்து போட்டவருக்கும், போடாதவருக்கும் அதற்கு ஏற்ற கவனிப்பு வந்து இருக்கும். நம் நண்பர் ஏதாவது ஒரு அலுவலகத்தில் புரோக்கராக இருந்தால், எனக்கு இல்லைப்பா, இந்த ஆபீசில் செங்கல் கூட பணம் கேட்கும் அதற்காத்தான் என்று சொல்லி வசூலிப்பார் அல்லவா. அந்தப்படியே இந்த வழக்கில் வசூல் பார்த்தது சிதம்பரத்தின் மகன்.

தற்போது தொடரப்பட்டுள்ள வழக்கும் கூட லஞ்சம் வழங்கு அல்ல. இதில் கையெழுத்துப் போட்ட அதிகாரிகள் லஞ்சம் வாங்கி இருப்பதாக புகாரோ, ஆதாரமோ இல்லை. ஆனால் இந்திராணியிடம் சிதம்பரத்தின் மகன் பணம் பெற்றுக் கொண்டது, அதற்காக அன்னியசெயலாவணி மோசடி செய்தற்கு டிஜிட்டல் ஆதாரம் கூட உள்ளது. அதாவது இந்த விவகாரத்தின் ஆணிவேர் சிதம்பரம், அவர் மகன் கார்த்திக் சிதம்பரமும் தான் இருவரும் இப்போது சிக்கி இருக்கிறார்கள்.

இனி வரும் காலத்தில் வாய் மொழி உத்தரவுக்கு தலையாட்டும் அதிகாரிகளும் சிக்குவார்கள். அதிகாரிகளே நீங்கள் நினைக்கும் ஆட்சி தற்போது நடக்க வில்லை என்பதை உணர்ந்து கொண்டு உஷாராக இருப்பது அனைவருக்கும் நல்லது. இதை நீங்கள் உணரவேண்டிய தருணத்தை சிதம்பரத்தின் டுவிட்டர் உருவாக்கி உள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP