Logo

விதைப்புக்கு வராதவர் அறுவடையில் பங்கு கேட்பதா: தமிழக பாஜகவினர் புலம்பல்!

உள்ளூரில் தன் பருப்பு வேகாது என்று புரிந்து கொண்டவர்கள், டில்லியில் சென்று சுற்றிவந்து ஏதோ தமிழகத்தில் இவர்களுக்கு மிகப் பெரிய பலம் இருப்பது போல காட்டிக் கொண்டு பதவியை பெற்று விடுவார்கள். இவர் சாதனை பட்டியலை பார்த்தால், கரகாட்டகாரன் திரைப்படத்தில் கனகாவிற்கு இணையாக, அண்ணன் டில்லியில் போராடினார்கள், காஷ்மீரில் போராடினார்கள். அவ்வளவு ஏன் அமெரிக்காவில் போராடினார்கள். தமிழகத்தில் நடந்து போக கூட அண்ணனுக்கு நேரமே இல்லை என்பது போல இருக்கிறது.
 | 

விதைப்புக்கு வராதவர் அறுவடையில் பங்கு கேட்பதா: தமிழக பாஜகவினர் புலம்பல்!

தமிழக பாஜக தலைவர் பதவியை பிடிப்பதில் நிலவும் கடும் போட்டி குறித்தும், அதற்காக அந்த கட்சியினர் டெல்லி வரை சென்று செய்யும் லாபி குறித்தும், பாஜக விசுவாசிகளாக தங்களை அறிமுகம் செய்துகொண்டு, உட்கட்சி விவகாரங்கள் குறித்து நம்மிடம் கூறியதை இங்கு தொகுத்து வழங்கி வருகின்றோம். 

அந்த வகையில் இதற்கு முன் 'பேராசிரியர்' ஸ்ரீனிவாசனின் லீலைகள் குறித்து அந்த கட்சியினரே புலம்பியதை தொகுத்து வழங்கியிருந்தோம். தற்போது அதற்ககு அடுத்தபடியாக ஏபி முருகானந்தம் எவ்வகை முயற்சிகளை மேற்கொண்டுள்ளார், அவரின் பின்னணி என்பது குறித்து, பாஜகவினர் புலம்பியதை இங்கு கொடுத்துள்ளோம். 

"ஒருபுறம் ஸ்ரீனிவாசன் என்றால், மற்றொருபுறம்,கோவையை சேர்ந்த ஏபி முருகானந்தம். பாஜ இளைஞர் அணியின் தேசிய செயலராக இருந்தவர். கோவை குண்டு வெடிப்பு கலவரத்திற்கு எதிராக, பாஜக நடத்திய போராட்டங்கள் தொடங்கி இன்று வரை அங்கு கட்சிக்காக என்ன வேலை பார்த்தார் என்பது அவரக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். 

உள்ளூரில் தன் பருப்பு வேகாது என்று புரிந்து கொண்டவர்கள், டில்லியில் சென்று சுற்றிவந்து ஏதோ தமிழகத்தில் இவர்களுக்கு மிகப் பெரிய பலம் இருப்பது போல காட்டிக் கொண்டு பதவியை பெற்று விடுவார்கள்.  இவர் சாதனை பட்டியலை பார்த்தால், கரகாட்டகாரன் திரைப்படத்தில் கனகாவிற்கு இணையாக, அண்ணன் டில்லியில் போராடினார்கள், காஷ்மீரில் போராடினார்கள். அவ்வளவு ஏன் அமெரிக்காவில் போராடினார்கள். தமிழகத்தில் நடந்து போக கூட அண்ணனுக்கு நேரமே இல்லை என்பது போல இருக்கிறது.

இதைவிட கொடுமை இவர்  தன் சொந்த மனைவியையே தற்கொலைக்கு தூண்டியது வழக்கும் பதியப்பட்டது.  இவர் இளைஞர் அணி செயலாளராக இருந்த போது, மனைவியை தற்கொலை செய்ய துாண்டிய வழக்கு.

 ஏபி முருகானந்தத்தின் மனைவி ஞானசவுந்தரி(32). இருக்கு குழந்தை இல்லை. இதை காரணம் காட்டி அவருக்கு மன உலைச்சலை ஏற்படுத்தினார். இதனால் மனம் உடைந்த அவர் 11–3–2014 ம் ஆண்டு வீட்டில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கோவை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதவி செய்யப்பட்டது. 

இது தொடர்பான ஆர்டிஓ விசாரணையில் ஞானசவுந்தரியின் தந்தை சுந்தரசாமி கவுண்டர் தன் மகள் பிஎச்டி முடித்து, தனியார் கல்லுாரியில் பேராசிரியையாக வேலை செய்தார் எனவும், அவருக்கு குழந்தைகள் இல்லை என்பதால் முருகானந்தம், அவர் தந்தை பழனிசாமி, தாய் வள்ளியம்மாள் ஆகியோர் மன உளைச்சல் ஏற்படுத்தியதாவும் தற்கொலைக்கு துாண்டியதாகவும் கூறினார். 

ஆர்டிஓ பரிந்துரையின் பேரில், சந்தேக மரணம் பிரிவு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தப்புவற்தாக குடும்பத்துடன் தலைமறைவாக இருந்தனர். அவர் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு செய்தித்தாள் ஆதாரமே உள்ளது. 

BJP youth wing secretary booked for abetment of wife's suici .. Read more at: http://timesofindia.indiatimes.com/articleshow/32379238.cms?utm_source=whatsapp&utm_medium=social&utm_campaign=TOIMobile&utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst

அந்த காலகட்டத்தில் முருகானந்தம் கட்சியில், அகில இந்திய இளைஞர் அணியில் முக்கிய பதவி இருந்தார். இந்த வழக்கு முழுவதும் அவர்களுக்கும் தெரியும்.இந்த சூழ்நிலையில் அவரை எப்படி தலைவராக நியமிப்பார்கள் என்பது தலைமைக்கே வெளிச்சம்" என, பாஜக விசுவாசிகள் தங்கள் புலம்பலை அவிழ்த்து விட்டுள்ளனர். 

தொடரும்...

நாய் வேடம் போடும் நரிகளை நம்பி ஏமாறப்போகிறாரா அமித் ஷா?
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP