எச்.ராஜாவாவது, கருணாஸாவது... அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிளப்பிய டாப் சர்ச்சைகள்!

நம்மூரில் சர்ச்சையாகவும், குதர்க்கமாவும் பேசும் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, எம்.எல்.ஏ கருணாஸ் ஆகியோரெல்லாம் அமெரிக்க அதிபர் ட்ரம்பை விட சிறந்தவர்கள் என்பதே ஆறுதல் கொள்ளச் செய்கிறது.
 | 

எச்.ராஜாவாவது, கருணாஸாவது... அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிளப்பிய டாப் சர்ச்சைகள்!

இதுவரை அமெரிக்க வரலாற்றில் இல்லாத அளவுக்கு குதர்க்கமான, வில்லங்கமான, விநோதமான, விபரீதமான கருத்துக்களும், செயல்பாடுகளும் கொண்ட  தடாலடி அதிபர் ட்ரம்ப். அவர் அதிபரான பிறகு வெள்ளை மாளிகையில், தான் நியமித்த பல அதிகாரிகளையே திடீரென்று வீட்டுக்கு அனுப்பி அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சி கொடுத்தவர். ட்ரம்ப் எந்த நேரத்தில் என்ன பேசுவார், என்ன செய்வார் என்பது வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கு நடுக்கமாகவே இருக்கிறதாம்.

ஒவ்வொரு நாளும் ட்ரம்ப் அடிக்கும் அபத்தமான, ஆபத்தான கமெண்டுகளில் தாக்கத்தை சரி செய்யவே உயர் அதிகாரிகள் திண்டாடி வருகிறார்கள். அப்படி ட்ரம்ப் அடித்த பல லூட்டிகள், பேச்சுகளில் சில... 

அட்டர்னி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸ் பற்றி ட்ரம்ப்... ’’இந்த ஆளுக்கு பைத்தியம். தெற்கிலிருந்து வந்த தத்தி இவர். இந்த ஆளை பதவியில் அமர்த்த நான் எப்படி ஒப்புக்கொண்டேன் என்றே தெரியவில்லை.’’

எச்.ராஜாவாவது, கருணாஸாவது... அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிளப்பிய டாப் சர்ச்சைகள்!

மகள் இவாங்காவுடன் ட்ரம்ப்

’’எனக்கெதிரான செய்திகள் எல்லாமே பொய்ச்செய்திகள். சி.என்.என், ஏ.பி.சி, என்.பி.சி, தேர்தல் கணிப்புகளைப்போல.’’

’’என் பதவியேற்பு விழாவிற்காக மிகப்பெரிய கூட்டம் கூடப்போகிறது. துணிக் கடைகளில் ஆடைகள் தீர்ந்த்து விட்டன. அதனால், நல்ல ஆடையுடன் விழாவிற்கு வருவது கடினமாக இருக்கும்’’. 

’’முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் பிறப்பு சான்றிதழ் பொய்யானது என்று நம்பத்தகுந்த ஒருவர் என் அலுவலகத்திற்கு போன் செய்து சொன்னார்’’. 

"ஹஃபிங்க்டன் போஸ்ட் பத்திரிக்கையின் பெண் அதிபர் அரியானா ஹஃபிங்டன் பற்றி ட்ரம்ப்... ‘’அரியானா உள்ளேயும், வெளியேயும் அழகில்லாதவர். அவருடைய கணவர் அவரை விட்டுவிட்டு இன்னொரு ஆணுடன் சேர்ந்து வாழ்வது நல்லது.’’ 

’’மெக்சிகோ நாட்டு எல்லையில் பெருஞ்சுவர் எழுப்புவேன் - குறைந்த செலவில் சுவர் எழுப்புவதில்  என்னை யாரும் மிஞ்ச முடியாது. மெக்சிகோவில் பிரச்னையுள்ளவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கிறது மெக்சிகோ. அவர்கள் திருடர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கற்பழிப்பவர்கள், வெகு சிலரே நல்லவர்கள்.’’ 

எச்.ராஜாவாவது, கருணாஸாவது... அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிளப்பிய டாப் சர்ச்சைகள்!

அமெரிக்க சீரியல் பெண் காமெடியன் ரோசி ஓடோனல் பற்றி ட்ரம்ப், ‘’ரோசி நடிக்கும் சீரியல்களை நான் இயக்கினால், அவரது தடினமான, அசிங்கமான முகத்தை நேராகப் பார்த்து ’வெளியே போ’ என சீரியலில் இருந்து விரட்டி இருப்பேன். ’’ ’’வெள்ளை மாளிகையில் அப்ரெண்டிசாக பயிற்சிக்கு வந்த அத்தனை பெண்களும் என்னை டாவடித்தார்கள். அது இயல்பானதுதான்.’’ ’’இவாங்கா என் மகளாக இல்லாமல் போயிருந்தால் நான் அவளை காதலித்திருப்பேன்’’. 

’’என் விரல்கள் நீளமானவை, அழகானவை. என் உடலின் பிற பாகங்களைப்போலவே அழகாக படைக்கப்பட்டவை’’. ’’ஒல்லியாக இருப்பவர்கள் டயட் கோக் குடித்து நான் பார்த்ததே இல்லை. எனக்கும் மற்ற வேட்பாளர்களுக்கும் உள்ள வித்தியாசம் நான் அதிக நேர்மையானவன். என் பெண் நண்பர்கள் மிக அழகானவர்கள்.’’

எச்.ராஜாவாவது, கருணாஸாவது... அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிளப்பிய டாப் சர்ச்சைகள்!

                                                                                          மனைவி மெலனியாவுடன்...

‘’என் டிவிட்டர் மிகுந்த சக்தி வாய்ந்தது. என்னுடைய பகைவர்களைக் கூட ட்விட்டர் மூலம் உண்மை பேச வைக்க முடியும்’’. ’’என் அறிவுத்திறன் மிக அதிகம் என்று உங்களுக்கே தெரியும். அதனால் உங்களை முட்டாள் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அது உங்கள் தவறில்லை.’’
’’நடிகை கிம் கர்தாசியன் நிர்வணமாக சன் பாத்திங் செய்தால் யார்தான் அதைப் படமெடுத்து பணமாக்க மாட்டார்கள்?’

’’மற்ற வேட்பாளர்கள் தேர்தல் அறைக்குள் நுழைந்த போது ஏசி வேலை செய்யவில்லை என்பதைக் கூட உணரவில்லை. நாய்கள் போன்று வியர்த்திருந்தார்கள். இவர்கள் எப்படி ஐ.எஸ் தீவிரவாதிகளை முறியடிப்பார்கள்? குடியரசு வேட்பாளர் மார்க்கோ ரூபியோவைப் பார்த்து ட்ரம்ப், ‘’ என் கைகளைப் பாருங்கள் எவ்வளவு பெரியது. கைகளே இவ்வளவு பெரியதாக இருந்தால்... மற்றதெல்லாம் எனக்கு எவ்வளவு பெரியதாக இருக்கும்’’. 

’’என் மனைவி மெலனியா நடித்த விளம்பரப்படத்திலிருந்து நடிகரும், இயக்குநருமான டெட் குரூஸ் ஆபாசமான படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். ஜாக்கிரதை டெட். உன் மனைவியின் அந்தரங்க விவரங்களை என்னால் வெளியிட முடியும்’’.  ’’என் எதிரி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனிடம் வெற்றிக்காக எந்த அட்டையும் இல்லை. உடலோடு ஒட்டிய அட்டையைத் தவிர.. இவர் ஆணாக இருந்திருந்தால் 5 சதவிகித ஓட்டுக்களைக்கூட பெற மாட்டார்’’.

 எச்.ராஜாவாவது, கருணாஸாவது... அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிளப்பிய டாப் சர்ச்சைகள்!

’’மீடியாவில் உள்ள பெண்கள் எதை எழுதினாலும் யாரும் கவலைப்படுவதில்லை.  அவர்களிடம் அழகான, இளமையான....... இருக்கும் வரை.’’
’’அழகான பெண்களைப் பார்த்தால் உடனே முத்தமிடுவேன். இது காந்தம் போன்றது. என்னை மாதிரி ஸ்டாராக இருந்தால் பெண்கள் தானாக முன் வந்து முத்தமிடுவது இயல்பு. அவர்களை என்னவேண்டுமானாலும் செய்யலாம். அவர்களின் பெண்ணுறுப்பை பிடித்து இழுத்தால் கூட ஒன்றும் செய்ய மாட்டார்கள்’’.

 ’’நடிகர் அர்னால்ட் ஸ்வாஷ்நிகர் கலிபோர்னியா கவர்னர் பணியில் ஒழுங்காக செயல்படவில்லை. அவரது பெண் உதவியாளர்களிடம் கூட...’’ 
‘’ 47 வயதான பெண் பத்திரிக்கையாளர் மேகன் கெல்லியை நேருக்கு நேர் விமர்சனம் செய்து விட்டு, ‘’ மிக உக்கிரமாக பேட்டி எடுத்தார். மேகனின் கண்களில் இருந்து ரத்தம் சொட்டியது .. வேறெங்கெங்கு சொட்டியது எனத் தெரியவில்லை.’’  

எச்.ராஜாவாவது, கருணாஸாவது... அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிளப்பிய டாப் சர்ச்சைகள்!

பெண் பத்திரிக்கையாளர் மேகன் கெல்லியுடன்...

’’என்னைப்பற்றி மார்னிங் ஜோ டிவி ஷோவில் மோசமாக பேசும் மிகா, என்னுடன் படுக்க விரும்பினார். நான் மறுத்து விட்டேன்...’’ என ட்ரம்ப் குதர்க்கமாகவும், ஆபாசமாகவும் பேசிய வார்த்தைகள் எக்கச்சக்கம்.  பல நேரங்களில் உதிர்த்த வார்த்தைகளை எழுத்தில் வடித்தால் அபத்தமாக இருக்கும்.

எச்.ராஜாவாவது, கருணாஸாவது... அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிளப்பிய டாப் சர்ச்சைகள்!
நம்மூரில் சர்ச்சையாகவும், குதர்க்கமாவும் பேசும் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, எம்.எல்.ஏ கருணாஸ்  ஆகியோரெல்லாம்  அமெரிக்க அதிபர் ட்ரம்பை விட சிறந்தவர்கள் என்பதே ஆறுதல் கொள்ளச் செய்கிறது.   

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP