ஸ்டாலின் பள்ளி முன்பு ஹிந்தி எதிர்ப்பு பேராட்டம்: ஹெச்.ராஜா

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பம் நடத்தும் பள்ளி முன்பு ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
 | 

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஹிந்தி மொழி குறித்த கேள்விக்கு, பாஜக சார்பில் ஹிந்தி எதிர்ப்பு பேராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் மு.க.ஸ்டாலின் குடும்பம் நடத்தும் சென்னை வேளச்சேரி பள்ளி முன்பு தான் முதல் போராட்டத்தை தொடங்குவேன் எனவும் மு.க.ஸ்டாலின் பள்ளியில் இந்தி கற்பிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறினார். பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஹெச்.ராஜா கோரிக்கை விடுத்தார். 

Newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP