அமமுக கட்சி என்னுடையது: புகழேந்தி

அமமுகவிலிருந்து தன்னை யாரும் நீக்கமுடியாது என்றும், கட்சியே தன்னுடையது தான் என்றும் தஞ்சையில் புகழேந்தி பேட்டியளித்துள்ளார்.
 | 

அமமுக கட்சி என்னுடையது: புகழேந்தி

அமமுகவிலிருந்து தன்னை யாரும் நீக்கமுடியாது என்றும், கட்சியே தன்னுடையது தான் என்றும் தஞ்சையில் புகழேந்தி பேட்டியளித்துள்ளார். 

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தஞ்சை வந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘என்னை கட்சியிலிருந்து யாரும் நீக்கமுடியாது, கட்சியே என்னுடையது தான். கட்சியை ஆரம்பித்ததில் நானும் ஒருவன். எந்தக் கட்டத்திலும் யாரையும் நம்பி இல்லை. கொள்கையை மட்டுமே நம்பி உள்ளேன். அமமுக நிர்வாகிகள் வெளியே செல்கிறார்கள் அதற்கு விசாரணை நடத்தவேண்டும் என்றுதான் நான் கூறினேன். இதற்கு எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அழைப்பு விடுத்தால் நான் சென்று நிரூபிப்பேன்’ என்றார்.

மேலும், ‘இதுவரை நான் எந்த கட்சிக்கும் செல்லவில்லை. பாஜவிற்கு செல்வதாக கூறுவது தவறான தகவல்; பாஜக அழைப்பு விடுத்திருந்தால் அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சசிகலா விரைவில் வெளியே வருவார் வெளியே வந்த பிறகு அவரை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். அமைச்சர் ஜெயக்குமார் தவிர எந்த அமைச்சரும் முதலமைச்சரும் அவரைப்பற்றி தவறாக பேசியது இல்லை. அவர் வெளியே வந்தால் கட்சிக்கு நல்ல காலம் பிறக்கும்.

இந்தி மொழி ஒரே மொழி என குரல் எழுப்பி வருகிறார்கள். இதற்கு ஆட்சியாளர்கள், ஸ்டாலின் உள்ளிட்டோர் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். இதில் கட்சி பேதம் பார்க்கக்கூடாது. செய்தி தொடர்பாளர் பட்டியலிலிருந்து நீக்கியதாக இதுவரை எனக்கு தகவல் வரவில்லை. இது சசிகலா கொடுத்த பதவி இது யாருக்கு வேண்டுமானாலும் செல்லலாம் வரலாம் இது தலைமை முடிவு செய்யும்’ என்றும் புகழேந்தி கூறியுள்ளார்.


Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP