அதிமுக அரசு சுதந்திரமாக செயல்படும் நிலைமையில் இல்லை: திருமாவளவன்

அதிமுக அரசு சுதந்திரமாக செயல்படக்கூடிய நிலையில் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 | 

அதிமுக அரசு சுதந்திரமாக செயல்படும் நிலைமையில் இல்லை: திருமாவளவன்

அதிமுக அரசு சுதந்திரமாக செயல்படக்கூடிய நிலையில் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

நாங்குநேரி இடைத்தேர்தல் குறித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நெல்லையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "  அதிமுக அரசு சுதந்திரமாக செயல்படக்கூடிய நிலையில் இல்லை என்றும், அதிமுக மூலமாக தமிழகத்தில் காலூன்ற பகிரங்க முயற்சி மேற்கொண்டு வருவதாக விமர்சித்தார். 

மேலும், திமுகவின் வலிமை குறையும் போது சாதி, மதவெறி பிடித்தவர்கள் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகும் என்றும், திமுக வலிமை இழக்கும்போது பாஜக ஒரு நடிகரையோ அல்லது ராமதாசையோ ஆட்சி அமைக்க வைக்கும் என்றும் தெரிவித்தார். வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தல்களில் நடிகர்கள் களமிறங்க உள்ளதாக குறிப்பிட்ட திருமாவளவன், திமுகவை பலமிழக்க செய்வது தான் அனைவரின் நோக்கமாக உள்ளது என கூறினார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP