வீராங்கனை கோமதிக்கு தமிழக காங்கிரஸ் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு!

கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

கத்தார் தலைநகர் தோஹாவில் 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றது. இதில்,  தடகளப்  போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், திருச்சியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்று சாதனை படைத்தார். இதன்மூலம், ஆசிய தடகள போட்டியில், இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் கிடைத்தது. 

வீராங்கனை கோமதியின் சாதனைக்கு பல்வேறு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரோபோ சங்கர், வீராங்கனை கோமதியின் சாதனையை பாராட்டியதோடு, அவருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

வீராங்கனை கோமதிக்கு தமிழக காங்கிரஸ் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP