அண்டப் புளுகு, ஆகாசப் புளுகுகளை அவிழ்த்து விடுகிறார் முதல்வர்: ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் முன்பு அண்டப் புளுகு ஆகாசப் புளுகுகளை அவிழ்த்து விடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 | 

அண்டப் புளுகு, ஆகாசப் புளுகுகளை அவிழ்த்து விடுகிறார் முதல்வர்: ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் முன்பு அண்டப் புளுகு ஆகாசப் புளுகுகளை அவிழ்த்து விடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 

உள்ளாட்சி தேர்தலை திமுக மறைமுகமாக நடத்தியது எதற்காக என்பது குறித்து விக்கமளித்துள்ள மு.க.ஸ்டாலின், "மறைமுக தேர்தல் என்பது கொள்கை மாற்றம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார். திமுக ஆட்சி காலத்தில் நிகழ்ந்ததும் கொள்கை மாற்றம் தான். அப்போதைய காலகட்டத்தில் அதிமுகவினர் ஒத்துழையாமை இயக்கம் நடத்தியதால் திமுக உள்ளாட்சி தேர்தலை மறைமுகமாக நடத்தியது. அதிமுகவினரால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதால் மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது. 

ஆனால், தற்போது தேர்தல் ஆணைய செயலாளர் மாற்றம், வார்டு வரையறைகளில் குளறுபடி பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு புதிய வார்டு வரையறை செய்யாதது என பல்வேறு குழப்பங்கள் மத்தியில்  திடீர் அவசர சட்டத்தை அதிமுக அரசு பிறப்பித்துள்ளது. அரசு விழாக்களை சிறிதும் நாணமின்றி முதல்வர் பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களிடம் அண்டப் புளுகு, ஆகாசப் புளுகுகளை அவிழ்த்து விடுகிறார். மக்கள் முன்னிலையில் பொய்யும், புரட்டும் பேசுவது முதல்வர் யாசித்துப் பெற்ற பதவிக்கு அழகல்ல" என கடுமையாக விமர்சித்தார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP