நாங்குநேரியை விற்றவர் ஸ்டாலின்: அமைச்சர் விமர்சனம்

நாங்குநேரி தொகுதியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பணத்திற்கு விற்றதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
 | 

நாங்குநேரியை விற்றவர் ஸ்டாலின்: அமைச்சர் விமர்சனம்

நாங்குநேரி தொகுதியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பணத்திற்கு விற்றதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். 

நெல்லை மாவட்டம் களக்காட்டில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரசிடம் ரூ- 20 கோடி பெற்றுக்கொண்டு நாங்குநேரி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியதாகவும், பணத்திற்கா நாங்குநேரியை விற்றதாகவும் விமர்சித்தார். 

மேலும், உள்ளாட்சி தேர்தலுக்கு தடை வாங்கியவர் ஸ்டாலின் என குறிப்பிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  தேர்தலை கண்டு அதிமுக பயப்படவில்லை என்றும் உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP