’ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார்’

வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை கொண்டு வரும் முதல்வருக்கு பேரும், புகழும் கிடைக்கக் கூடாது என்பதற்காக ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார் என்று திருச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியளித்துள்ளார்.
 | 

’ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார்’

வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை கொண்டு வரும் முதல்வருக்கு பேரும், புகழும் கிடைக்கக் கூடாது என்பதற்காக ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார் என்று திருச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியளித்துள்ளார்.

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’144 ஆவது அம்மா பல்பொருள் சிறு அங்காடியினை இன்று திறந்துவைக்கிறோம். ரேஷன் கடைக்கு வருபவர்கள் ரேஷன் பொருட்களை மட்டுமன்றி 300 வகையான பொருட்களையும் குறைந்தவிலையில் இங்கு வந்து வாங்குவதால் இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 552 கடையை திறக்க வேண்டுமென்று முதலமைச்சர் உத்தரவிட்டதன்பேரில் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. 

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் காங்கிரஸ், திமுக கையெழுத்திட்டு கொண்டு வந்தது. சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தால் தமிழக மக்களுக்கு கடுகளவும் பாதிப்பில்லை. சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டதை மறைப்பதற்காக கே.எஸ்.அழகிரி போராட்டம் அறிவித்து இருக்கிறார்.

வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை கொண்டு வரும் முதல்வருக்கு பேரும், புகழும் கிடைக்கக் கூடாது என்பதற்காக ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார். ரேஷன் கடைகளை குறைகூறும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ரேஷன் கடைகளில் சென்று முதலில் ஆய்வு மேற்கொள்ளட்டும். அதன் பிறகே குறைகளை கூற வேண்டும்.

இலவச டிவி கொடுத்த கலைஞர் கேபிள் கனெக்ஷனை தனது வீட்டில் வைத்துக் கொண்டார். ரஜினி சிறந்த நடிகர். நல்ல மனிதர். மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேசக் கூடியவர். அவர் கட்சி ஆரம்பித்தால் யாருக்கு பாதிப்பு என்று சொல்ல முடியாது. முதலில் அவர் கட்சியை ஆரம்பிக்கட்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP