வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க சிறப்பு அதிகாரி : ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களையும், அவை வைக்கப்பட்டுள்ள மையங்களையும் பாதுகாக்க, சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
 | 

வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க சிறப்பு அதிகாரி : ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களையும், அவை வைக்கப்பட்டுள்ள மையங்களையும் பாதுகாக்க, சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தேனி மற்றும் ஈரோடு மக்களவைத் தொகுதிகளுக்கு, கோவை உள்ளிட்ட  இடங்களிலிருந்து 50 -க்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்ட நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், "மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றபோது பதிவு செய்யப்பட்ட வாக்குகளை தேர்தல் துவங்குவதற்குமுன் நீக்கிவிட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், சில தேர்தல் அதிகாரிகள் இதை செய்யத்தவறியதால் தவறுகள் நடந்துள்ளன. தமிழகத்தில் 46 இடங்களில் இதுபோல தவறுகள் நடந்துள்ளன" என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யவிரத சாஹூ இன்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த விவகாரங்கள் தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது:
தேர்தல் அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நியாயப்படுத்துகிறார். அவர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இழந்துவிட்டன. 

வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பதில், தமிழகத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும், அவை வைக்கப்பட்டுள்ள மையங்களையும் முழுமையாக, முறையாக பாதுகாக்க சிறப்பு அதிகாரியை தேர்தல் ஆணையம் நியமிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP