விரட்டும் தொகுதி மக்கள்... மிரட்டும் செந்தில் பாலாஜி.. இருட்டறையில் தம்பித்துரை..!

மக்கள் எதிர்ப்பு ஒரு புறம் என்றால் மறுபுறம் தம்பிதுரையை தோற்கடித்தே தீருவேன் என முன்னாள் அமைச்சரும் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளருமான செந்தில் பாலாஜி சபதம் போட்டு வருகிறார். இருட்டறையில் மாட்டிய பூனை போல் சிக்கி தவிக்கிறார் தம்பிதுரை
 | 

விரட்டும் தொகுதி மக்கள்... மிரட்டும் செந்தில் பாலாஜி..  இருட்டறையில் தம்பித்துரை..!

சசிகலாவுக்கு ஆரம்பத்தில் நெருங்கிய விசுவாசியாக இருந்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் தம்பித்துரை. அதன் பிறகு  அ.தி.மு.கவில் இருக்கிறார். இங்கேயும் ஓவர் ஜால்ரா போடுவது போல் காட்டிக்கொள்கிறார்.

விரட்டும் தொகுதி மக்கள்... மிரட்டும் செந்தில் பாலாஜி..  இருட்டறையில் தம்பித்துரை..!

ஆனால், மத்திய, மாநில உளவுத்துறைகள் கொடுத்த அறிக்கையில் இவர் சசிகலாவின்  விசுவாசி. ஏகப்பட்ட விவகாரங்களை செய்து வருகிறார். இவரை நம்பினால் பாஜகவுக்கு  தேசிய அளவில் களங்கத்தை ஏற்படுத்திவிடுவார் என டெல்லிக்கு அறிக்கை போயிருக்கிறது. அப்போதிலிருந்தே டெல்லியில உள்ள முக்கிய தலைவர்கள் யாரும் தம்பிதுரையை அருகில் நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டனர். இதனால் ஏற்கனவே போட்டியிட்டு ஜெயித்த தொகுதியில் முகாமிட்டு மீண்டும் நாடாளுமன்றத்துக்கு போகிற வேலையில் இறங்கினார்.

விரட்டும் தொகுதி மக்கள்... மிரட்டும் செந்தில் பாலாஜி..  இருட்டறையில் தம்பித்துரை..!

அதுவும் கைகொடுக்கவில்லை. எங்கே சென்றாலும் கடும் எதிர்ப்பு.  ’நாலு வருஷமா எங்களை உங்க கண்ணுக்கு தெரியல, இப்போது மட்டும் எங்களை தெரியுதா?’ எனக் கேட்டு தொகுதி மக்கள்  வறுத்தெடுக்கிறார்கள். மக்கள் எதிர்ப்பு ஒரு புறம் என்றால் மறுபுறம் தம்பிதுரையை தோற்கடித்தே தீருவேன் என முன்னாள் அமைச்சரான டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் செந்தில் பாலாஜி சபதம் போட்டு வருகிறார். பொதுமக்களின் குறைகளை எடுத்துக் கொண்டு புதுக்கோட்டையில் அதிகாரிகளை சந்தித்த தம்பிதுரை, ’என் தொகுதியை திட்டமிட்டு அதிகாரிகள் புறக்கணிக்கிறீங்க... தண்ணி இல்ல, சாலை வசதி இல்லை, பல கிராமங்களுக்கு மின்வசதி இல்லை... என்ன செய்யறீங்க’ எனக் கேட்டு துளைத்து எடுத்தாராம்.

விரட்டும் தொகுதி மக்கள்... மிரட்டும் செந்தில் பாலாஜி..  இருட்டறையில் தம்பித்துரை..!

அவருக்கு பதிலடி கொடுத்த அதிகாரிகள், ’’தமிழ்நாட்டில் எங்கேயுமே சாலைகள் சரியாக இல்ல... இங்க மட்டும் ஏன் கேள்வி கேட்கிறீங்க... போய் சம்பந்தப்பட்ட அமைச்சரை கேளுங்க’ என பொறிந்து தள்ளி விட்டார்களாம். இதில் மத்திய அமைச்சர் சுயபரிசோதனை செய்ய கூறுவதால் யாரை சமாளிப்பது என தெரியாமல் இருட்டறையில் மாட்டிய பூனை போல் சிக்கி தவிக்கிறார் தம்பிதுரை என்கிறார்கள்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP