2021-இல் ரஜினிகாந்த் தான் முதலமைச்சர்....அடித்து சொல்லும் கராத்தே தியாகராஜன்....!

நடிகர் ரஜினிகாந்த் 6 மாதங்களில் கட்சி ஆரம்பிப்பார் என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
 | 

2021-இல் ரஜினிகாந்த் தான் முதலமைச்சர்....அடித்து சொல்லும் கராத்தே தியாகராஜன்....!

நடிகர் ரஜினிகாந்த் 6 மாதங்களில் கட்சி ஆரம்பிப்பார் என்று கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ஆதரவாளர் ஆவார். ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதை குறித்து தொடர்ந்து பல தகவல்களை அளித்து வருபவர்களில் கராத்தே தியாகராஜனும் ஒருவர்.

இந்த நிலையில், ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கராத்தே தியாகராஜன், ‘ தமிழகத்தில் ஜெயயலிதா, கருணாநிதியின் வெற்றிடத்தை நிரப்பப்போவது ரஜினிதான். நடிகர் ரஜினிகாந்த் இன்னும் 6 மாதங்களில் கட்சி ஆரம்பிப்பார். 2021 சட்டப்பேரவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று  தமிழகத்தில் ஆட்சியை பிடித்து ரஜினி முதலமைச்சர் ஆவார்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP