வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு!

வேலூர் தொகுதியில் உள்ள கூடநகரம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.
 | 

வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு!

வேலூர் தொகுதியில் உள்ள கூடநகரம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது. 

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வேலூரில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பில் கதிர் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர். வேலூர் தொகுதிக்குட்பட்ட கூட நகரம் வாக்குச் சாவடியில் காலை 7 மணிக்கு வழக்கம் போல் வாக்குப்பதிவு தொடங்கியது.

ஆனால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதால், உடனே வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரந்தின் பழுது சரிசெய்யப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு வாக்குப்பதிவு தொடங்கியது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP