இந்தியை எதிர்க்கவில்லை; இந்தி திணிப்பை தடுக்கிறோம் - டிடிவி.தினகரன்

இந்தியை எதிர்க்கவில்லை என்றும் இந்தி திணிப்பை தான் தடுக்கிறோம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
 | 

இந்தியை எதிர்க்கவில்லை; இந்தி திணிப்பை தடுக்கிறோம் - டிடிவி.தினகரன்

இந்தியை எதிர்க்கவில்லை என்றும் இந்தி திணிப்பை தான் தடுக்கிறோம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். 

கும்பகோணத்தில் தந்தை பெரியாரின் 141 வது பிறந்தநாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்தியை எதிர்க்கவில்லை என்றும் இந்தி திணிப்பை தான் தடுப்பதாகவும் கூறினார். மேலும்,  மத்திய அரசு இந்தியை தமிழ்நாட்டில் திணிக்காது என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார் 

தொடர்ந்து பேசிய அவர், அமமுக கட்சியின் செல்வாக்கு வளர்ந்து வருவதாகவும், வருங்காலத்தில் அமமுக தான் தமிழகத்தின் மிகப்பெரிய சக்தியாக பெரிய கட்சியாக விளங்கும் எனவும் தெரிவித்தார். 

சசிகலாவை விரைவில் ஜெயிலில் இருந்து விடுவிக்க முயற்சி செய்து வருவதாகவும், அவர் வெளியே வந்தவுடன் அமமுக, அதிமுக இணைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு அது வதந்தி என்றும் வதந்திகளுக்கு பதில் கூற முடியாது எனவும் கூறினார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP