‘மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அருங்காட்சியகம்’

திருவாரூரில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 | 

‘மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அருங்காட்சியகம்’

திருவாரூரில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருவாரூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், ‘திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் வகையில் 3 ஏக்கரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் அருங்காட்சியகத்தை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

‘மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அருங்காட்சியகம்’

மேலும், ‘நீட் தேர்வு முறைகேட்டில் 50 பேர் வரை ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். வெளிமாநில தரகர்களுக்கும் முறைகேட்டில் தொடர்பு இருப்பதால் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். மருத்துவர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP