மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது!

ஆசிரியர் வீரமணி கலந்து கொள்ளும் திருமணத்தில் கூட அவர் வருவதற்கு முன்பு தாலி கட்டி விட்டு, பின்னர் அவர் வந்ததும் அதை சுய மரியாதை திருமணமாக மாற்றிக் கொள்ளலாம். விஷயம் அறிந்தவர்கள் கேட்டால் பொண்ணு வீடு வசதியானவர்கள், பக்தி அதிகம். அதனால் என்ன நம்ம வீடு வந்த பி்ன்னாடி பகுத்தறிவுக்கு மாறிவிடும் என்று கூறி சமாளிப்பாரகள். அல்லது மாப்பிள்ளை வீடு பணக்காரர்கள் என்று மாறும்.
 | 

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது!

ஆயுத பூஜை அன்று  தமிழகத்தில் மிகப் பெரிய சர்சை ஏற்படுத்திய விவகாரம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரபேல் விமானத்திற்கு பூஜை செய்தது. அதில் எலுமிச்சை பழங்களை ரபேல் விமானத்தின் டயரில் வைத்து நசுக்கியது. அப்பாச்சி ஹெலிகாப்டர்களுக்கு பூஜை செய்தது.

இதை விமர்சனம் செய்தவர்கள் எந்த அளவி்ற்கு இந்த நாட்டின் பண்பாட்டை விட்டு விலகிவிட்டார்கள் என்பதை தான் அது காட்டுகிறது.

இந்த நாட்டின் உயிர் நாடி ஆன்மீகம். இதற்கு மதங்கள் தடையில்லை. ஒவ்வொருவரும்  வீட்டிற்கு வாங்கும் பொருளை கூட நேரடியாக பயன்படுத்தாமல் முதலில் சென்று சாமி படத்தின் முன்பு வைத்து வணங்க சொல்வார்கள். கிறிஸ்தவர்கள் பொருளை வைத்து சுற்றி நின்று குடும்பமே நன்றி சொல்லி ஜெபிக்கும். இஸ்லாமியர்கள் துவா செய்து இறைவனுக்கு படைப்பார்கள்.

சமைத்த உடன் சாப்பிட்டால் அது சாதம், கடவுளுக்கு படைத்தால் அது பிரசாதம். இது இந்த தேசத்தின் பண்பாடு. இதற்கான காரண காரியம் தெரியாமல் போனதாலும், கடைபிடித்தாலும், கடைபிடிக்காவிட்டாலும் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதாலும் பகுத்தறிவு இது போன்ற விஷயங்களை நம்பிக்கை இழக்க செய்துவிட்டது.

மற்ற மதங்களில் நம்பிக்கை இழந்தால் அந்த மத்தில் தொடரவே முடியாது. ஆனால் இந்துக்கள் அப்படி இல்லை. வீட்டில் அனைத்து விஷயங்களையும் கடைபிடித்துக் கொண்டு வெளியில் சே சே இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்று மார்தட்டமலாம்.

ஆசிரியர் வீரமணி கலந்து கொள்ளும் திருமணத்தில் கூட அவர் வருவதற்கு முன்பு தாலி கட்டி விட்டு, பின்னர் அவர் வந்ததும் அதை சுய மரியாதை திருமணமாக மாற்றிக் கொள்ளலாம். விஷயம் அறிந்தவர்கள் கேட்டால் பொண்ணு வீடு வசதியானவர்கள், பக்தி அதிகம். அதனால் என்ன நம்ம வீடு வந்த பி்ன்னாடி பகுத்தறிவுக்கு மாறிவிடும் என்று கூறி சமாளிப்பாரகள். அல்லது மாப்பிள்ளை வீடு பணக்காரர்கள் என்று மாறும்.

இப்படி தலைவர்களை கூட ஏமாற்றும் தொண்டர்கள் தான் கொள்கை பிடிப்பாளர்களாக நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் எவ்வளவு உயரத்திற்கு போனாலும் நம் வழக்கத்தை கடைபிடிக்கும் மத்திய அமைச்சர்கள் செய்வது மூட நம்பிக்கையாக இருக்கிறது. முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணிமனைவி எலிசபெத் விக்கிராந்த் கப்பலுக்கு  சிலுவை வழிபாடு நடத்தினார்.

இப்படி தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, பொது வாழக்கை இரண்டையும் ஒன்றாக நினைப்பவர்கள் தங்களின் பண்பாட்டை வெளிப்படுத்துகிறார்கள். அதை நம்மவர்கள் கேலி செய்வதும், எச்சல் கூட விழுங்காமல் நோம்பு நோற்பவர்கள் நோம்பு திறக்கும் நிகழ்ச்சியில் தலையில் தொப்பி அணிந்து கொண்டு ஏற்கனவே வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு கலந்து கொள்வதை அவர்கள் இஸ்லாமியர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்கள் என்று பாராட்டுவதும் நம் விதி. 

உண்மையில் இஸ்லாமியர்கள் மீது பற்று இருப்பவராக இருந்தால், இப்தார் விருந்தில் கலந்து கொள்ளும் அன்றாவது நோம்பு நோற்கலாம்.  ஆனால் அவர்கள் அப்படி இல்லை.

தற்போது சமூக ஊடங்கள் ஆதிக்கம் பெருகிவிட்டதால் அனைத்து விஷயங்களும் விமர்சனம் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் இவற்றை எழுதுபவனை நேரில் பார்த்தால் அவன் வீரத்திற்கும், எழுத்துக்கும் சம்பந்தமே இருக்காது. அது போன்றவர்களை நம்பினால் நம் வாழ்க்கையில் பலவற்றை இழப்போம் என்பது மட்டும் நிச்சயம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP