மாமல்லபுரத்தை உலகின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக்குக: விஜயகாந்த் கோரிக்கை 

மாமல்லபுரத்தை உலகின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
 | 

மாமல்லபுரத்தை உலகின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக்குக: விஜயகாந்த் கோரிக்கை 

மாமல்லபுரத்தை உலகின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

சீன அதிபர், பிரதமர் வருகைக்கு பிறகு, மாமல்லபுரத்தின் சிறப்பு உலகம் முழுவதும் தெரிந்துவிட்டது. இரு தலைவர்கள் வந்து சென்ற பிறகு, அதிகளவில் சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், சீன அதிபர், பிரதமர் வருகைக்கு பிறகு, மாமல்லபுரத்தின் தரம் உலகத்தரத்திற்கு உயர்ந்திருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடபாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், மாமல்லபுரத்தை உலகின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மாமல்லபுரத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க மக்களும், அரசாங்கமும் கரம் சேர்ந்து செயல்பட வேண்டும் என்றும் விஜயகாந்த் கேட்டுகொண்டுள்ளார்.

newsmtm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP