அமமுகவுடன் அதிமுகவை இணைப்போம்: தினகரன்

சசிகலாவிடம் ஆலோசனை செய்து தான் நான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். சட்டப்போராட்டத்தில் சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் அமமுகவுடன் அதிமுகவை இணைப்போம் என்று, சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
 | 

அசோக் நகரில் உள்ள அமமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகரன், ‘சசிகலாவிடம் ஆலோசனை செய்து தான் நான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். சட்டப்போராட்டத்தில் சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் அமமுகவுடன் அதிமுகவை இணைப்போம். கட்சியை பதிவு செய்ய தொண்டர்களிடம் பிரமாணப் பத்திரம் பெற்றுள்ளோம். அமமுக துணைத்தலைவராக அவைத்தலைவரான நாமக்கல் அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். சசிகலாவுக்காக அமமுகவில் தலைவர் பதவி எப்போதும் காலியாகவே இருக்கும்’ என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP