ஓபிஎஸ் பாஜகவில் இணைவது உறுதி : அடித்துச் சொல்லும் தங்கதமிழ்ச்செல்வன்

பாரதிய ஜனதா கட்சியில் ஓ.பன்னீர்செல்வம் இணைவது உறுதி என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
 | 

ஓபிஎஸ் பாஜகவில் இணைவது உறுதி : அடித்துச் சொல்லும் தங்கதமிழ்ச்செல்வன்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவில் இணைவது உறுதி என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " மே 23 -ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வந்தவுடன், தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பாஜகவில் இணைவது உறுதி. அதற்காகதான் அவர், வாரணாசிக்கு குடும்பத்துடன் சென்று வந்துள்ளார். மேலும், பாஜகவுடன் தொடர்பில் இருந்ததால் தான் ஓபிஎஸ்-ஐ முதல்வர் பதவியில் இருந்து நீக்கினோம்" என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP