தப்பிய எடப்பாடி தக்க வைப்பாரா...?

திமுகவை நெறிப்படுத்த சாட்டையை சுழற்ற தொடங்க வேண்டும். அப்போதுதான் மீண்டும் அதிமுக தன் மரியாதையை தக்க வைத்துக் கொள்ள முடியம்.
 | 

தப்பிய எடப்பாடி தக்க வைப்பாரா...?

தமிழகத்தில் லோக்சபா தேர்தலை விட அதிமுக்கியத்துவம் கொண்ட தேர்தலாக சட்டசபை இடைத் தேர்தல் நடந்தது. அதிமுக ஆட்சிப் பொருப்பை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்திலும், திமுக ஆட்சிக்கு வரும் வாய்ப்பை இழந்து விடக் கூடாது என்ற நிலையிலும் இந்த இடைத் தேர்தல் நடந்தது. அதனால் தான் லோக்சபா தேர்தலில் அதிமுகவும், திமுகவும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்களை வாரிக் கொடுத்தாலும் 22 தொகுதிகளிலும் அந்த கட்சிகளே போட்டியிட்டடன.

திமுகவின் நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட கவர்ச்சிகரமான தேர்தல மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி தமிழகத்தில் நாம் ஆட்சிக்க வந்து விடுவோம், அப்போது நிறைவேற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் வழக்கப்பட்டது.

ஆனால் தேர்தல் முடிவுகள் ஆசை இருக்கு தாசில்பண்ண கதையாக ஸ்டாலினுக்கும், எச்சரிக்கை மணியாக எடப்பாடிக்கும் அமைந்துவிட்டது. 
இதன் காரணமாக சட்டசபையில் திமுக அதிமுக இடையிலான வித்தியாசம் ஒரு சில இடங்களாக மாறிவிட்டது. எனவே இன்னும் 2 ஆண்டுகாலம் இந்த ஆட்சிக்கு இருந்த ஆபத்து விலகி விட்டது.

லோக்சபா தேர்தலில் புதுச்சேரி உட்பட 38 இடங்களை கொடுத்த தமிழகம் அதே மனநிலையில் சட்டசபைத் தேர்தலை அணுக வில்லை. என்பது தேர்தல் முடிவுகள் ளெவிப்படுத்துகிறது. திமுக 13 இடங்களில் பெற்ற வெற்றி தமிழக மக்கள் மனம் மாறிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறிதான்.  அதிமுக லோக்சபாவில் பலத்த தோல்வியையும், சட்டசபையில் பாதி தோல்வியையும் பெற்றதற்கு காரணம் அவர்கள் தான்.

 பன்னீர்செல்வம், எடப்பாடியார் நெருக்கும் ஒடிந்த முருங்கை மரத்தை ஒட்டுப் போட்ட கதையாகத்தான் இருக்கிறது. கடைசித் தொண்டர்கள் வரை மீண்டும் அந்த இணக்கத்தை  கொண்டு வரமுடியவில்லை. அதே. போல பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தினகரன் நேரடியாக ஓட்டுகளை பிரித்து அதிமுகவின் வலிமையை குறைக்காவி்ட்டாலும், மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளார்.   அதாவது கட்சியில் அனுபவம் வாய்ந்த கிளை நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளை தன் தன் பக்கம் இழுத்துக் கொண்டதால், அதிமுகவில் அவர்கள் இடம் காலியாகவோ, அல்லது வெற்றிடமாகவோ தான் உள்ளது. இந்த நிலை திமுகவிற்கு சாதகமாக அமைந்து விட்டது. இதன் காரணமாக அந்த கட்சி அதிக இடங்களை பிடித்துள்ளது.

முதன் முறையாக முதல்வர் நாற்காலியில் அமர விரும்பும் ஸ்டாலின் கூட்டணிக் கட்சித் தலைவராக முதல்வர் என்ற முள்கிரீடத்தை 2 ஆண்டுகள் தாங்குவதை விரும்புவாரா என்ற கேள்வி. அவர் விருப்பினாலும் அதற்காக நடக்கும் எண்ணிக்கை விளையாட்டு, குதிரை பேரம் ஆகியவற்றை மக்கள் ஏற்பார்பார்களா போன்ற நிலைப்பாடுகள் தான் எடப்பாடிக்கு தற்காலிக நிம்மதியை கொடுத்துள்ளது.

ஆனால் 2 ஆண்டுகள் கழித்து நடக்கும் தேர்தலில் இதே நிலை நீடித்தால் அதிமுகவின் வெற்றி கேள்விக்குறிதான். அதன் காரணமாக தினகரன், மற்றும் அவரது ஆதரவாளர்களை மீண்டும் ஒன்றாக சேர்த்து கட்சியை வலுவாக்குவது நல்லது.  எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜெ. ஜா என அதிமுக பிரிந்த காரணத்தால் அப்போது திமுக ஆட்சிக்கு வந்தது. அதில் கற்றுக் கொண்ட பாடத்தால் மீண்டும் 2 கட்சிகளும் இணைந்தன. அதே நிலைப்பாட்டை அதிமுகவில் உள்ள அனைவரும் எடுக்க வேண்டும்.

குட்கா ஊழல், பொள்ளாட்சி பாலியல்பலாத்காரம் என்று தமிழகத்தை பல பிரச்சைனை அடுக்கடுக்காக ஆட்டுவித்தால் கூட அதைப்பற்றி கவலைப்பாடாத முதல்வர் என்ற பெயர் எடப்பாடியாருக்கு ஏற்பட்டு விட்டது. இதை மாற்ற வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது. அவர் அதிமுகவை நெறிப்படுத்த சாட்டையை சுழற்ற தொடங்க வேண்டும். அப்போதுதான் மீண்டும் அதிமுக தன் மரியாதையை தக்க வைத்துக் கொள்ள முடியம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP