திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது..!

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் தொடங்கியது.
 | 

திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது..!

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில்  போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் தொடங்கியது. 

விக்கிரவாண்டி, நாங்கு நேரி தொகுதியில் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கி வரும் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாங்கு நேரி தொகுதியில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடவுள்ளதால், திமுக நாங்கு நேரியில் போட்டியிடவில்லை.

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு நேற்று பெறப்பட்ட நிலையில், இன்று வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடைபெறுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்று வரும் நேர்காணல் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த நா. புகழேந்தி, ரவிதுரை உள்ளிட்டோரிடம் நேர்காணல் நடைபெறுகிறது.

திமுக தலைவர் ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினும் விருப்பமனு வழங்கியுள்ளதால், நேர்காணலில் பங்கேற்பார் என தெரிகிறது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP