தேனியில் மக்களுக்கு அல்வா கொடுத்ததா அதிமுக? ஸ்டாலின் கேள்வி

தேனியில் மக்களுக்கு அல்வா கொடுத்து வெற்றி பெற்றீர்களா? என்று அதிமுகவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
 | 

தேனியில் மக்களுக்கு அல்வா கொடுத்ததா அதிமுக? ஸ்டாலின் கேள்வி

'தேனியில் மக்களுக்கு அல்வா கொடுத்து வெற்றி பெற்றீர்களா?' என, அதிமுகவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து கே.வி.குப்பத்தில் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின்போது பேசிய ஸ்டாலின், ‘திமுகவிற்கு களங்கம் ஏற்படுத்தவே வேலூர் தேர்தலை ரத்து செய்தார்கள். தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து மத்திய, மாநில அரசுகள் சதி செய்தன. திமுகவை எதிர்த்து போட்டியிடுபவர் பற்றி பேசி அவருக்கு விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை. திமுக ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்' என்றார்.

மேலும், 'மக்களிடம் மிட்டாய் கொடுத்து ஏமாற்றி திமுக வெற்றி பெற்றதாக, அதிமுகவை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள் என்ற ஸ்டாலின், தேனியில் மக்களுக்கு அல்வா கொடுத்து அதிமுக வெற்றி பெற்றதா?' என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP