கருத்துக்கேட்பு என்ற பெயரில் நாடகம் நடத்திய தேர்தல் ஆணையம்: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

கருத்துக்கேட்பு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தியுள்ளது தேர்தல் ஆணையம், இது ஜனநாயக நடைமுறைகளை கேலிக்கூத்தாக்குவதாகும் என அமமுகவின் தேர்தல் துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
 | 

கருத்துக்கேட்பு என்ற பெயரில் நாடகம் நடத்திய தேர்தல் ஆணையம்: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

கருத்துக்கேட்பு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தியுள்ளது தேர்தல் ஆணையம் என அமமுகவின் தேர்தல் துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று காலை அறிவித்துள்ளது. 

இதுகுறித்து பேசிய அமமுகவின் தேர்தல் துணைப் பொதுச்செயலர் டிடிவி தினகரன், "கருத்துகேட்பு என்ற பெயரில் தேர்தல் ஆணையம் ஒரு நாடகடத்தை அரங்கேற்றியுள்ளது என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில். "தேர்தல் அறிவிக்கை வெளியிட்டு தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பிறகு, கருத்து கேட்பு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலை ரத்து செய்திருக்கிறது தேர்தல் ஆணையம். இது ஜனநாயக நடைமுறைகளை கேலிக்கூத்தாக்குவதாகும்.

இந்த ஜனநாயக விரோத செயலை ஆளும் அ.தி.மு.க. வுக்கு சாதகமாக செய்ய முயன்றபோதே கண்டித்திருக்க வேண்டிய தி.மு.க.வும் இதற்கு துணைபோனது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தி.மு.க.வுக்கும் தோல்வி பயம் இருந்ததையே இது காட்டியது.

திருவாரூரில் அ.ம.மு.க. வெற்றி பெறும் என்ற கள யதார்த்தத்தை உணர்ந்தே இந்த விஷயத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கைகோர்த்துள்ளன. இதற்கு சரியான தண்டனையை எப்போது தேர்தல் வந்தாலும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் வழங்க திருவாரூர் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்" என குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP