வசைப்பாடியவருக்கே வாக்கு கேட்பதா? : ஸ்டாலினை சாடிய இபிஎஸ்!

5 ஆண்டுகளில் 2 கட்சிகளில் நின்ற ஒரே வேட்பாளர் செந்திபாலாஜி தான் என்று முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
 | 

வசைப்பாடியவருக்கே வாக்கு கேட்பதா? : ஸ்டாலினை சாடிய இபிஎஸ்!

செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது அவரை விமர்சித்த ஸ்டாலின், தற்போது அவருக்காக வாக்கு சேகரிக்கிறார் என்று முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். 

அப்போது பேசிய முதல்வர், ‘5 ஆண்டுகளில் 2 கட்சிகளில் நின்று தேர்தலில் போட்டியி்ட்ட ஒரே வேட்பாளர் செந்தில் பாலாஜி தான். விலாசம் கொடுத்த அதிமுகவுக்கு துரோகம் செய்த செந்தில் பாலாஜி மக்களுக்கு எப்படி  நல்லது செய்வார்?. செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது அவரை விமர்சித்த ஸ்டாலின், தற்போது அவருக்காக வாக்கு சேகரிக்கிறார்.

மேலும், ‘ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் எனக் கூறிய ஸ்டாலின், சந்திரசேகர் ராவை சந்தித்து தன் எண்ணத்தை மாற்றிவிட்டார். ஸ்டாலின் தேர்தல் முடிவுக்கு முன்னதாகவே தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார். ஸ்டாலினை போல் நாங்கள் மாற்றி மாற்றி பேசமாட்டோம்’ என்றார் முதல்வர் பழனிசாமி.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP