அமமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.
 | 

அமமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொள்கை பரப்பு துணை செயலாளராக நடிகர் ரஞ்சித், அமமுக அமைப்புச் செயலாளர்களாக திருவான்மியூர் முருகன், முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், அமமுக தேர்தல் பிரிவு துணை செயலாளராக திருப்பூர் முன்னாள்  மேயர் ஏ.விசாலாட்சி, அமமுக மாணவரணி செயலராக ஆர்.பரணீஸ்வரன், திருப்பூர் மாவட்ட செயலாளராக பி.ஈஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP