’200 சதுர அடி வீடுகள் 400 சதுர அடியாக மாற்றப்படும்’

200 சதுர அடி உள்ள குடிசைமாற்று வாரிய வீடுகள் 400 சதுர அடி வீடுகளாக கட்டப்படும் என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
 | 

’200 சதுர அடி வீடுகள் 400 சதுர அடியாக மாற்றப்படும்’

200 சதுர அடி உள்ள குடிசைமாற்று வாரிய வீடுகள் 400 சதுர அடி வீடுகளாக கட்டப்படும் என்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் வல்லீஸ்வரன் தோட்டத்தில் குடிசை மாற்று வாரிய வீடுகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆய்வு செய்தார். 

இதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை முதலமைச்சர், ‘சென்னை ராஜாஅண்ணாமலைபுரம் வல்லீஸ்வரன் தோட்டத்தில் இடவசதியுடன் குடிசைமாற்று வாரிய வீடுகள் கட்டப்படும். 200 சதுர அடி உள்ள குடிசைமாற்று வாரிய வீடுகள் 400 சதுர அடி வீடுகளாக கட்டப்படும்’ என்றார்.

மேலும், அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்கிறதா என்ற கேள்விக்கு, விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு ஆதரவு தரும் கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளோம் என்று, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP