திருமணம் ஆகவில்லை.. பெற்றெடுத்த குழந்தையுடன் வந்த இளம்பெண்ணால் போலீஸ் அதிர்ச்சி !

திருமணம் ஆகவில்லை.. பெற்றெடுத்த குழந்தையுடன் வந்த இளம்பெண்ணால் போலீஸ் அதிர்ச்சி !

திருமணம் ஆகவில்லை.. பெற்றெடுத்த குழந்தையுடன் வந்த இளம்பெண்ணால் போலீஸ் அதிர்ச்சி !
X

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சிறுவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் பொன்னுசாமி(21). இவரும் குரூர் கிராமத்தைச் சேர்ந்த பிரியா (19) என்ற பெண்ணும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்ததாகத் தெரிகிறது. 

இந்நிலையில் பிரியாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறிய பொன்னுசாமி, அவரை பல இடங்களுக்கு அழைத்துச்சென்று உல்லாசம் அனுபவித்துள்ளார். இது கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்துள்ளது.   

இதன் காரணமாக கர்ப்பமான பிரியா, 15 நாட்களுக்கு முன்பாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். தொடக்கத்தில் இருந்தே தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு பொன்னுசாமியிடம் பிரியா வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், திருமணம் செய்ய பொன்னுசாமி மறுப்புத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், பிரியாவிற்கு கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரியா திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பொன்னுசாமியின் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த போலீசார் பொன்னுசாமியிடம் விசாரணை மேற்கொண்டு அவரை கைது செய்தனர். 

newstm.in 

Next Story
Share it