குளியலறையில் விழுந்து உயிரிழந்த காவல் அதிகாரி! பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி!!

குளியலறையில் விழுந்து உயிரிழந்த காவல் அதிகாரி! பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி!!

குளியலறையில் விழுந்து உயிரிழந்த காவல் அதிகாரி! பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி!!
X

பெங்களூருவில் காவல்துறை அதிகாரி ஒருவர் குளியலறையில் விழுந்து இறந்துள்ளார். இறப்புக்குப் பிறகான மருத்துவ சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது.

வைட்ஃபீல்ட் காவல் நிலையத்தைச் சேர்ந்த 57 வயதான உதவி சப்-இன்ஸ்பெக்டர் அவரது இல்லத்திலுள்ள குளியலறையில் மயங்கி விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனை வருவதற்கு முன்பாகவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்பிறகு அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள் மருத்துவ பரிசோதனை அனுப்பப்பட்டது. அந்த மருத்துவ பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது. இறந்த காவல்துறை அதிகாரியுடன் அவரது மனைவியும் மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில், சுகாதாரத் துறை அதிகாரிகள் இப்போது மறைந்த காவல்துறை அதிகாரியுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடி கண்டறிந்து வருகின்றனர். 

newstm.in

Next Story
Share it