காதலித்து ஏமாற்றிய வழக்கு... போக்கிரி பட ஒளிப்பதிவாளர் கைது!

காதலித்து ஏமாற்றிய வழக்கு... போக்கிரி பட ஒளிப்பதிவாளர் கைது!

காதலித்து ஏமாற்றிய வழக்கு... போக்கிரி பட ஒளிப்பதிவாளர் கைது!
X

காதலித்து ஏமாற்றியதாக நடிகை கொடுத்த புகார் அடிப்படையில் போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அர்ஜுன் ரெட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை சாய் சுதா, கடந்த 7 வருடங்களாக ஷியாம் கே நாயுடு என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த போக்கிரி, பிசினஸ்மேன் உள்பட பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து நடிகை சாய் சுதாவிடம் நெருங்கி பழகி வந்துள்ளார் ஷியாம் கே நாயுடு. ஆனால்  வாக்குறுதி கொடுத்தபடி திருமணம் செய்து கொள்ளவில்லை. 


இதையடுத்து நடிகை சாய் சுதா போலீசில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் ஷியாம் கே.நாயுடுவை கைது செய்து விசாரித்து ஜாமீனில் விடுவித்தனர். இந்தநிலையில் ஸ்ரீசுதாவும் தானும் தங்கள் பிரச்சனையில் சாமாதானமாக போக முடிவுசெய்து விட்டதாக ஷியாம் கே.நாயுடு நீதிமன்றத்தில் சில ஆவணங்களை சமர்ப்பித்தார். ஆனால் அதில் இருந்த சாய் ஸ்ரீசுதாவின் கையெழுத்து போலியானது என்பது தெரியவந்தது. இதனால் மோசடி மற்றும் ஏமாற்றுதல் என்கிற பிரிவுகளில் ஷியாம் கே.நாயுடு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 

newstm.in

Next Story
Share it