1. Home
  2. தமிழ்நாடு

முகக்கவசம் அணியாத பிரதமருக்கு ரூ.13,000 அபராதம் விதிப்பு!

முகக்கவசம் அணியாத பிரதமருக்கு ரூ.13,000 அபராதம் விதிப்பு!


முகக்கவசம் அணியாமல் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு நாட்டின் பிரதமருக்கு இந்திய மதிப்பில் 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பல்வேறு நாடுகள் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வீடுகளை விட்டு வெளியே வரும் நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இதே விதிமுறை பல்கேரியா நாட்டிலும் அமலில் உள்ளது. இந்நிலையில், பல்கேரியாவின் பிரதமரான பொய்க்கோ போரிசோவ் அந்நாட்டின் ரிலா மனொஸ்டோரி நகரில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனை நடத்தினார். ஆனால் அப்போது அவர்  முகக்கவசம் அணியவில்லை. அவருடன் சென்ற அதிகாரிகள் பலரும், பத்திரிக்கையாளர்களும் முகக்கவசம் அணியாமல் விதிகளை மீறியுள்ளனர். இதையடுத்து, அவர்களுக்கு தலா 300 லிவ்ஸ், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். 

newstm.in

Trending News

Latest News

You May Like