1. Home
  2. தமிழ்நாடு

மத்திய அரசு அனுமதி... தமிழகத்தில் 2 வாரத்தில் பிளாஸ்மா சிகிச்சை!

மத்திய அரசு அனுமதி... தமிழகத்தில் 2 வாரத்தில் பிளாஸ்மா சிகிச்சை!


தமிழகத்தில் கொரோனா பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி அளித்துள்ளது.

பிளாஸ்மா தெரபி என்பது ஒருவரின் ரத்தத்தின் பிளாஸ்மாவில் இருக்கும் எதிர்ப்பு சக்தி செல்களை இன்னொருவரின் ரத்தத்திற்கு அனுப்புவது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவரின் உடலில் வைரஸூக்கு எதிரான செல்கள் அதிகம் இருக்கும். அந்த செல்களை வைத்து சிகிச்சை மேற்கொள்வார்கள். இந்த கொரோனா பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ள தமிழக அரசு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் அனுமதி கேட்டு இருந்தது.  தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி அளித்துள்ள நிலையில், இது தொடர்பான சாத்திய கூறுகளை கண்டறிய தமிழக அரசு மருத்துவர்கள் ஆய்வு செய்துவருகின்றனர். 


பிளாஸ்மா சிகிச்சை தற்போது உலகம் முழுக்க பிரபலம் அடைந்து வருகிறது. பிளாஸ்மா சிகிச்சை மூலம் தென்கொரியாவில் பலரும் குணமடைந்ததுள்ளனர். அமெரிக்காவிலும் பிளாஸ்மா சிகிச்சை குறித்து சோதனை செய்து வருகிறார்கள். 

newstm.in

Trending News

Latest News

You May Like