பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..

சென்னையில் அண்ணியும் மச்சினனும் செய்த காரியத்தை கேட்டு போலீசார் அதிர்ந்து விட்டனர்.
 | 

பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..

சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் என்பவர் வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி மதியம் கடையில் இருந்தபோது, மளிகை சாமான் வாங்க வந்த ஒரு இளைஞர் பேச்சியம்மாள் கழுத்தில் கிடந்த தங்க செயினை அறுத்து கொண்டு ஓடினார். பேச்சியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு வருவதற்குள் அந்த இளைஞர் ஒரு இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்றார். 

இது குறித்து  பேச்சியம்மாள் அம்பத்தூர் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, நகையை பறித்து சென்ற இளைஞர் ஏறி சென்ற ஸ்கூட்டியில் முன்னாள் இருந்தவர் ரெயின்கோட் அணிந்து ஹெல்மெட் வைத்திருந்தார். இதையடுத்து அந்த பைக் செல்லும் வழியெல்லாம் இருந்த 64 சிசிடிவி கேமிராக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..

பைக் வில்லிவாக்கம் சப்-வே வரை சென்றது பதிவாகியிருந்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று, சிசிடிவியில் பார்த்த அதே கலர் ஸ்கூட்டி வந்தது. அதனை ஒரு பெண் ஓட்டி வந்துள்ளார். அவரை வழிமறித்து போலீசார் விசாரித்தபோது, முகத்தில் எந்தவித சலனமும், பதட்டமும் இல்லாமல் மிக சாதரணமாக பதிலளித்தார்.

சற்று நேரம் குழம்பி போன போலீசார், பெண்ணின் கையில் இருந்த வளையலை கவனித்தனர். சிசிடிவியில் பைக் ஓட்டியவர் வளையலை போலவே அந்த வளையலும் இருந்தது. இதையடுத்து அந்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் விசாரிப்பதற்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர்.  

பிளான் போட்டும் வசமா சிக்கிய அண்ணியும்- மச்சினனும்.. அதிர்ந்து போன போலீசார்..

காவல்நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தியதில் அனைத்து உண்மையும் வெளியே வந்தது. அந்த பெண்ணின் பெயர் ரேவதி (30). இவர் வில்லிவாக்கம், நாராயண மேஸ்திரி தெருவில் வசித்து வருகிறார். இவரது கணவர் ஜெயசந்திரன் ஐசிஎப்.பில் உள்ள, பெட்ரோல் பங்க்-கில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ரேவதியின் ஸ்கூட்டிக்கான கடன் அடைக்கப்படாமல் உள்ளது. அதை அடைப்பதற்கா அவரது மச்சினன் ராஜேஷ் (31) உடன் ரெயின் கோர்ட் போட்டுக்கொண்டு கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது தான், பேச்சியம்மாளிடம் இருந்து மூன்றரை பவுன் நகையை கொள்ளையடித்துள்ளார். 

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், ரேவதியையும், ராஜேஷையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP