பினாகா ஏவுகணை சோதனை வெற்றி!!

 | 

வெவ்வேறு தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் பினாகா ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது

பினாகா ஏவுகணை அமைப்பின் சோதனை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இவை 40 கிலோ மீட்டர் தூரம் முதல் வெவ்வெறு தூரங்களில் உள்ள இலக்குகளை தாக்கும் சக்தி கொண்டவை.

மத்திய அரசு நிறுவனமான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஆய்வகங்களான, கனரக ஆயுதங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், உயர் ஆற்றல் பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகம் ஆகியவை இணைந்து பினாகா ஏவுகணை அமைப்பை வடிவமைத்துள்ளன.

pinaka 1

இதேபோன்று, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதும், ஹெலிகாப்டரில் இருந்து ஏவக்கூடியதுமான சந்த் ஏவுகணையும் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணை தொலைவில் இருந்து, பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையாகவும் செயல்படும்

இதனை, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை இணைந்து பொக்ரானில் சோதனை செய்தனஅதிநவீன மில்லி மீட்டர் அலை ரேடார் தேடும் கருவி பொருத்தப்பட்டுள்ள இந்த ஏவுகணை, 10 கிமீ தூரம் வரையிலான இலக்குகளை தாக்கும்இவ்விரு சோதனைகளையும் வெற்றிகரமாக நடத்திய குழுவிற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP