1. Home
  2. தமிழ்நாடு

தமிழகம் முழுக்க நாளை பெட்ரோல் பங்குகள் இயங்காது!

தமிழகம் முழுக்க நாளை பெட்ரோல் பங்குகள் இயங்காது!


தமிழகம் முழுவதும் அரசு அறிவித்து ஊரடங்கு கடந்த ஜுன் 30ம் தேதியோடு முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, ஊரடங்கை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஊரடங்கு காலம் முடியும் வரையிலான ஞாயிற்றுக்கிழமைகளில் இனி பெட்ரோல் பங்குகள் இயங்காது என தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் ,

இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை தமிழகம் முழுவதும் அனைத்து பெட்ரோல் பங்குகளும் இயங்காது என்றும், பால், ஆம்புலன்ஸ் மற்றும் அவசர மருத்துவ வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , வரும் திங்கட்கிழமை முதல் முகக்கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like