1. Home
  2. தமிழ்நாடு

எம்எல்ஏ-விடம் கோரிக்கை விடுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்!

1

உ.பி சர்க்காரி தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் பிரிஜ்பூஷன் ராஜ்புத். அவர் தனது காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ​​மஹோபாவில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நிறுத்தி வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பினார். அப்போது பெட்ரோல் நிரப்பும் ஊழியர் பெண் பார்க்க உதவுமாறு எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தார். இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் வைரலாகி வருகிறது.

சர்க்காரியில் வசிக்கும் பெட்ரோல் நிலைய உதவியாளர் அமிலேந்திர கரே, எம்.எல்.ஏ.விடம் "எனக்கு பெண் பார்க்க உதவுங்கள்" என்று கேட்கிறார். அதற்கு எம்.எல்.ஏ. பிரஜ்பூஷன் ராஜ்புத் "உனக்கு எவ்வளவு வயது" என்று கேட்க, அந்த ஊழியர் "44 வயது" என்று கேட்கிறார். "உனக்கு ஒரு பெண் தேட என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய்?" என எம்.எல்.ஏ., கேட்க, ஊழியர், ''உங்களுக்கு நான் ஓட்டு போட்டேன் என்றார்.

அதற்கு எம்.எல்.ஏ. "வேறு யாரிடம் பெண் கேட்டாய்.. உனக்காக வேண்டிக் கொள்கிறோம். பெண் தேடுகிறேன். நீ எனக்கு வாக்களித்ததால்" என்கிறார்.  பெண்  வீட்டர் கேட்டால் உங்கள் வருமானம் எவ்வளவு என்று கேட்டால் சொல்ல வேண்டும் என கேட்டார். அதற்கு "6 ஆயிரம் ரூபாய். 13 பிகாஸ் நிலம்" உள்ளது என்றார்,   நிலத்தின் மதிப்பு கோடிக்கணக்கில் உள்ளது. "நான் உங்களுக்கு உதவுகிறேன்," என்று கூறி சென்றார். இந்த வீடியொ வைரலாகி வருகிறது.


 


 

Trending News

Latest News

You May Like