1. Home
  2. தமிழ்நாடு

ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க உத்தரவிடக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு!

1

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட அடையாளம் . ஆதார் அட்டையில் முழு அடையாளமான கைரேகைகள், புகைப்படம், முகவரி, பிறந்த தேதி மற்றும் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே வேறு எந்த நபரின் ஆதார் அட்டை தொடர்பாக எந்த முறைகேடும் அல்லது மோசடியும் மேற் கொள்ள இயலாது.


மேலும் நமது தமிழ்நாட்டில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை , உள்ளாட்சித் துறை , நிதிச் சேவைத் துறை உள்ளிட்ட துறைகளில் ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாக்கவும், மோசடி பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி கடை பிடிக்கப்பட்டு வருகிறது.

நமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்திய அரசியலமைப்பின் கீழ் வாக்குரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ. , உள்ளாட்சி தேர்தல் காலத்தில் ஒவ்வொரு குடிமகனின் வாக்குகளையும் பெற வாக்காளர் அடையாள அட்டை அவசியமான ஆவணமாகும்.எனவே முறைகேடுகளை தடுக்கும் வகையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த பொது நல மனு நீதிபதிகள் M.S. ரமேஷ் , மரிய கிளீட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் ஏற்கனவே இதே கோரிக்கையுடன் ஒரு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தாக தெரிகிறது. இது குறித்து , தேர்தல் ஆணையரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க மத்திய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Trending News

Latest News

You May Like