கோவை மக்களே உஷார்... திடீரென அதிகரிக்கும் கொரோனா!

கோவை மக்களே உஷார்... திடீரென அதிகரிக்கும் கொரோனா!

கோவை மக்களே உஷார்... திடீரென அதிகரிக்கும் கொரோனா!
X

கோவையில் நேற்று ஒரே நாளில் 117 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களாக கோவையில் கொரோனா தொற்று மிகவும் குறைவாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளின் எண்ணிக்கை 100ஐ கடந்திருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மாநகராட்சியை பொருத்தவரை செல்வபுரம் பகுதியில் அதிகப்படியாக 20 பேருக்கும், உக்கடத்தில் 10 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. செல்வபுரம் பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை மொத்தம் 1261 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 930 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு எண்ணிக்கை 9ஆக உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 28 இடங்கள் சீல் வைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளது.

newstm.in

Next Story
Share it