அலட்சியத்தில் மக்கள்... ஒரே நாளில் ரூ.73,300 அபராதம் வசூலித்த சென்னை மாநகராட்சி !!

 | 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடம், நேற்று ஒரே நாளில் 73 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் அளித்துள்ளது. தியேட்டர்கள் திறப்பு, நீச்சல் குளம், மதுபான பார் போன்ற கட்டுப்பாடுகள் மட்டுமே தொடர்கிறது. 

பேருந்து இயக்கம் உள்ளிட்ட தளர்வுகள் அளித்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர். அதில் பெரும்பாலானோர் கொரோனா அச்சமின்றி சுற்றிவருவதை காணமுடிகிறது. முகக்கவசம் அணியாமலும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் சுற்றி வருகின்றனர். இதனால் மீண்டும் கொரோனா பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
இதனைகட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, காவல் துறையினருடன் இணைந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக சென்னை மாநகராட்சி சிறப்பு குழு நியமித்துள்ளளது.

அக்குழுவினர், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத வணிக வளாகங்கள் மற்றும் தனிநபர்களிடம் இருந்து தொடர்ச்சியாக அபராதம் வசூலித்து வருகின்றனர்.

 அந்த வகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் நேற்று ஒரு நாள் நடத்திய ஆய்வில் மட்டும், 73,300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 10,400 ரூபாயும், அம்பத்தூர் மண்டலத்தில் 9 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP