1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார் !! தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்...

மக்களே உஷார் !! தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்...


தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழக அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள்;

  • பேருந்துகளில் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை
  • வாடகை டாக்ஸியில் ஓட்டுநர் உட்பட மூன்று பேருக்கு மட்டுமே அனுமதி
  • ஆட்டோகளுக்கு ஓட்டுநர் உட்பட 2 பேருக்கு மட்டுமே அனுமதி
  • இறுதி ஊர்வலத்தில் 50 பேர் மட்டுமே அனுமதி
  • தியேட்டர்களில் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி
  • விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்களின்றி நடத்த அனுமதி
  • உணவகங்கள்,தேநீர் கடைகள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி
  • கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை கடைகள் மட்டும் வரும் 10ம் தேதி முதல் செயல்பட தடை
  • திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் மட்டுமே பங்கேற்க அனுமதி
  • அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி
  • வணிக வளாகங்கள் 50% விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி
  • அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.
  • வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வர இ- பதிவு முறை தொடரும்.
  • நீச்சல் குளங்களில் விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி
  • தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.
  • முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி, அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து கடைகள்,ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை தொடரும்.
  • பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகத்துக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும்.
  • பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளருடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள், பொதுமக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுவதையும் முகக்கவசம் அணிவதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து அனுமதிக்க வேண்டும். முகக் கவசங்கள் அணியாமல் இருப்பவர்களை கட்டாயமாக அனுமதிக்க கூடாது.
  • சின்னத்திரை மற்றும் திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். இருப்பினும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வதை சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்பு நிர்வாகங்கள் செய்ய வேண்டும்.

வரும் 10 ஆம் தேதி அமுலுக்கு வரும் இந்த கட்டுப்பாடுகள் வரும் ஏப்ரல் 30 தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

Trending News

Latest News

You May Like