மக்கள் ஷாக்..! ரூ.62 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை..!

சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கமாக காணப்பட்ட நிலையில், இன்று மாதத்தின் தொடக்க நாளான இன்று (பிப். 1ஆம் தேதி) தங்கம் விலை கிராமுக்கு அதிரடியாக ரூ. 15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,745க்கும் ஒரு சவரன் ரூ.120 உயர்ந்து ரூ. 61,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மாத கடைசி தினமான நேற்று (ஜன.31ஆம் தேதி) தங்கம் விலை கிராமுக்கு அதிரடியாக ரூ. 120 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,730க்கும் ஒரு சவரன் ரூ.960 உயர்ந்து ரூ. 61,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ. 107க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.