1. Home
  2. தமிழ்நாடு

மக்கள் ஷாக்..!! நேற்று ரூ.1320 குறைவு; இன்று ரூ.680 அதிகரிப்பு!

Q

அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்ட நிலையில், பங்குச்சந்தைகள் உயர்வை சந்தித்தன. அதேபோல, தங்கம் விலையும் சரிவை சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்தனர். அதன்படியே, நேற்று தங்கம் விலை ரூ.1,320 குறைந்து மக்களை நிம்மதியடையச் செய்தது..

நேற்று முன்தினம் (நவ.,07) தங்கம் கிராம், 7,365 ரூபாய்க்கும், சவரன், 58,920 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (நவ.,08) தங்கம் விலை கிராமுக்கு 165 ரூபாய் குறைந்து, 7,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,320 ரூபாய் சரிந்து ரூ. 57,600 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து, 102 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

தங்கம் விலை தொடர்ந்து சரியும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.7,285-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.58,280-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து ரூ.1,03,000 ஆக உள்ளது. இன்று முகூர்த்த தினம் என்பதால் தங்க நகை வாங்க மக்கள் ஆர்வத்துடன் இருந்த நிலையில், மீண்டும் விலை கூடியுள்ளது.

Trending News

Latest News

You May Like