மக்கள் குஷியோ குஷி..! அமுதம் மக்கள் அங்காடியில் ₹499க்கு 15 மளிகைப் பொருட்கள்..!

அமுதம் அங்காடியில் 15 பொருட்கள் அடங்கிய ”சிறப்பு தொகுப்பு” தீபாவளி பண்டிகையை ஒட்டி விற்பனைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, சென்னை மற்றும் கடலூர் மண்டலத்தில் அமுதம் அங்காடிகள் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன.
வெளிச்சந்தையை காட்டிலும் குறைவான விலைக்கு விற்கப்படுவதால் பொதுமக்களுக்கு 1,000 முதல் 1,500 ரூபாய் வரை மீதியாகிறது.குறிப்பாக கோபாலபுரம் அமுதம் அங்காடி நவீனப்படுத்துவதற்கு முன்பு 50 ஆயிரம் ரூபாய் அளவில் தான் வியாபாரம் நடந்து வந்தது. தற்போது 2 லட்சம், 3 லட்சம், 4 லட்ச ரூபாய் வரை தினசரி வியாபாரம் நடந்து வருகிறது.
இத்தகைய சிறப்புமிக்க தருணத்தில் பொதுமக்கள் நலன் கருதி 15 வகை மளிகை பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின் பேரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். இதன் உண்மையான விலை 600 முதல் 650 ரூபாய் வரை இருக்கும்.ஆனால் அமுதம் அங்காடியில் 499 ரூபாய்க்கு விற்கிறோம்.
15 மளிகை பொருட்கள் அடங்கிய 'அமுதம் பிளஸ்' என்ற தொகுப்பு, தமிழ்நாடு அரசின் அமுதம் அங்காடி, அமுதம் ரேஷன் கடைகளில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 3.8 கிலோ எடையில் 15 பொருட்கள் கொண்ட தொகுப்பு ரூ.499க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அமுதம் அங்காடியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இன்று தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமுதம் அங்காடிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான இடத்தை தேர்வு செய்து அனுப்பும் படி மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டிருந்தோம். அவர்களின் நிறைய இடங்களை தேர்வு செய்து அனுப்பியுள்ளனர். விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
கோபாலபுரம், அண்ணா நகர் பகுதியில் உள்ள அமுதம் அங்காடி உள்ளிட்ட 10 அமுதம் நியாயவிலைக் கடைகளில் முதற்கட்டமாக இந்த விற்பனை நடக்கும். தீபாவளிக்கு தங்கு தடை இன்றி நியாய விலை கடைகளில் பொருட்கள் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து நியாய விலைக் கடைகளிலும் போதுமான அளவு பொருட்கள் உள்ளன. பொருட்கள் இல்லை என்ற நிலை எங்கும் இல்லை" என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.