1. Home
  2. தமிழ்நாடு

பெகாசஸ் அச்சம்... செல்போன் கேமராவை டேப் போட்டு ஒட்டிய மம்தா பானர்ஜி !!

பெகாசஸ் அச்சம்... செல்போன் கேமராவை டேப் போட்டு ஒட்டிய மம்தா பானர்ஜி !!


நாடு முழுவதும் தற்போது பெரும் புயலை கிளப்பியுள்ளது பெகாசஸ் விவகாரம். அதாவது இந்தியாவில் அரசியல் தலைவர்கள், அரசியல் வல்லுநர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் என 300 பேரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மேற்குவங்க தேர்தலையொட்டி மம்தா பானர்ஜியின் உறவினர் செல்போனும் உளவு பார்க்கப்பட்டதாக பட்டியலில் உள்ளது.

பெகாசஸ் அச்சம்... செல்போன் கேமராவை டேப் போட்டு ஒட்டிய மம்தா பானர்ஜி !!

இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது எதிர்க்கட்சியினர் கடுமையாக சாடி வருகின்றனர். அந்த வகையில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமது செல்போனின் கேமராவை டேப் போட்டு ஒட்டி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் கடைபிடிக்கப்பட்டு வரும் தியாகிகள் தினத்தையொட்டி நேற்று நாடு முழுவதும் உள்ள மேற்கு வங்க மக்களிடம் காணொலி மூலம் மம்தா பானர்ஜி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, ஊடகம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் மூலம் தான் ஜனநாயகத்தை உருவாக்க முடியும். இவை மூன்றையும் பெகாசஸ் கைப்பற்றியுள்ளது. பெகாசஸ் மென்பொருள் மிகவும் ஆபத்தானது. இந்த விவகாரத்தால் சரத் பவார், டெல்லி முதலமைச்சர், கோவா முதலமைச்சர் ஆகியோரிடம் என்னால் பேச முடியாது. கண்ணுக்கு தெரியாத பொருளை என் மொபைலில் பொருத்தியுள்ளார்கள்.

பெகாசஸ் அச்சம்... செல்போன் கேமராவை டேப் போட்டு ஒட்டிய மம்தா பானர்ஜி !!

செல்போன் ஆடியோ வீடியோ மூலமாக ஒட்டுக் கேட்கப்படுவதால் எனது செல்போனின் கேமராவை டேப் போட்டு மூடி வைத்திருக்கிறேன் என தனது போனை உயர்த்திக் காட்டியபடி கூறினார்.

மேலும், மத்திய அரசை அடக்கி வைக்கவில்லை என்றால் , நாடு அழிந்துவிடும். கூட்டாச்சி கட்டமைப்பை பாஜக தரைமட்டமாக்கியுள்ளது. ஜனநாயகத்தையும் நாட்டையும் உச்சநீதிமன்றம் காப்பாற்ற வேண்டும். அனைவரின் மொபைலும் வேவு பார்க்கப்பட்டுள்ளதால் நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை விசாரணைக்கு எடுத்து கொள்ளக் கூடாதா? இதுகுறித்து விசாரணை செய்ய ஆணையம் அமைக்க வேண்டும்.

மேலும், ஜூலை 27 அல்லது 28ஆம் தேதிகளில் டெல்லிக்கு செல்ல உள்ளேன். எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தால் அதில் கலந்து கொள்வேன் என கூறினார்.

newstm.in

Trending News

Latest News

You May Like