1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் தலையில் ரூ.2,63,976 கடன் ..!!

தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் தலையில் ரூ.2,63,976 கடன் ..!!


தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக விரைவில் தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்து. ஆளுநர் உரையில், ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்ற அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. ஆனால், குறிப்பிட்டபடி, ஜூலை மாதம் வெளியாகவில்லை.

தமிழகத்தின் தற்போதைய நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று வெளியாக இருக்கிறது.20 ஆண்டுகளுக்கு முன்னர், கடந்த 2001ஆம் ஆண்டு, சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் இந்த ஆண்டு பொது வெளியில் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில்,கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தின் வருமானம் அதிக அளவில் சரிந்துவிட்டது என்றும் வருமானம் சரிந்துள்ளதை ரிசர்வ் வங்கி, நிதிக்குழு உள்ளிட்ட அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன எனவும் தெரிவித்தார். 2020-21-ம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் தலையில் ரூ.2,63,976 கடன் உள்ளதாக வெள்ளை அறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி அதிகரித்து விட்டது. மேலும் தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்த போது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது. 2016-ல் அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் ரூ.2.28 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 2021-ல் அதிமுக அரசன் 10 ஆண்டு முடிவில் தமிழ்நாட்டின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது.

2006 - 2011 வரை திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் வருவாய் உபரியாக இருந்தது. கடைசி 5 ஆண்டுகளில் அதிமுக அரசின் வருவாய் பற்றாக்குறை 1 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. அரசின் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலை அதிமுக ஆட்சியில் இருந்தது.வருவாய் பற்றாக்குறையே ரூ.1.50 லட்சம் கோடியாக இருந்ததால், நிதிப் பற்றாக்குறை அதைவிட பலமடங்கு உயர்ந்து விட்டது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு அரசின் வருவாய் 4-ல் ஒரு மடங்கு குறைந்துவிட்டது.

Trending News

Latest News

You May Like