மீண்டும் விஜய்யை வம்புக்கு இழுக்கும் கருணாகரன்!! விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பில்..>!

மீண்டும் விஜய்யை வம்புக்கு இழுக்கும் கருணாகரன்!! விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பில்..>!

மீண்டும் விஜய்யை வம்புக்கு இழுக்கும் கருணாகரன்!! விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பில்..>!
X

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ளதால் , ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்நிலையில் சில நடிகர் நடிகைகளும் கொரானா நிவாரண நிதியை அரசுக்கு வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஜய் அரசுக்கு 1.30 கோடி ரசிகர் மன்றங்களுக்கு 50 லட்சமும் நிதி உதவி செய்துள்ளார். அது மட்டும் இல்லாமல் கஷ்டப்படும் விஜய் ரசிகர்கள் குடும்பத்திற்கு தலா 5,000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் நிதி உதவி செய்த ஒரே நடிகர் என்ற பெயரையும் பெற்று இருக்கிறார். இதனால் அனைத்து மாநில முதலமைச்சர்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பாண்டிச்சேரி மாநிலத்திற்கு 5 லட்சம் அனுப்பிய விஜய்யை அதன் முதலமைச்சர் பாராட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் அனைத்து நடிகர்களும் இதுபோன்று உதவ முன்வர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு கருணாகரன், விஜய்யை போல் எங்களுக்கும் சம்பளம் கொடுங்கள் நாங்களும் செய்கிறோம் என்பதைப்போல கிண்டலாக தனது பதிவை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் மற்ற ரசிகர்களையும் கோபப்படுத்தி சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்தும் , ஒரு சிலர் கோவப்பட்டு திட்டியும் வருகின்றனர். 

Newstm.in

Next Story
Share it